போதை - லாவண்யா




ஊனும் உயிருமான
எழுத்துகள்
உதிரத்தில் மிதக்கக் கூடும்

பேய் விரட்டுவதினும்
கடினமானதே
வாசிப்பின் போதையை
விட்டொழிப்பது

வாசிப்பை நிறுத்தி வைத்து
சற்றே இடைவெளி விட்டு
மீண்டும் ஒருநாள்
படிக்கும் போதுணர்ந்தேன்
போதையொன்றும் 
பெரும் பரவசத்தை தருவதில்லை 

அதிகாலை கனவை தொடர்வது
பாதியில் படித்து நிறுத்திய
கதையை தொடர்வது
போல எளிதல்ல