ராம்ப்ரசாத் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில்
பிறந்தவர். சென்னையில் மென்பொருள்
கட்டுமானராக பணியாற்றுகிறார். உயிரோசை, வடக்குவாசல், கணையாழி முதலான கலை இலக்கிய இதழ்களில் இவரின்
கவிதைகளும், குங்குமம், ராணி, குமுதம் முதலான வெகுஜன பத்திரிக்கைகளில் இவரின்
சிறுகதைகளும், தேவியின் கண்மணியில் இவரது நாவல்களும் வெளியாகியிருக்கின் றன. காவ்யா
பதிப்பகம் மூலம் ஒப்பனைகள் கலைவதற்கே என்ற தலைப்பில் இரண்டு நாவல்களின்
தொகுதி இவரது முதல் நூல்.
