மனுஷியின் இயற்பெயர் ஜெயபாரதி. விழுப்புரம் மாவட்டம்
திருநாவலூரில் பிறந்தவர். தற்போது, புதுவைப் பல்கலைக்கழகம், சுப்பிரமணிய பாரதியார்
தமிழியற்புலத்தில் முனைவர் பட்ட ஆய்வினை
மேற்கொண்டு வருகிறார்.
2012ஆம் ஆண்டு இவரது “குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்” என்னும் முதல் கவிதைத் தொகுப்பு மித்ர பதிப்பக
வெளியீடாக வெளியானது. இதில் 2008இல் இருந்து 2012 வரை
எழுதப்பட்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மதுரையில் நடைபெற்ற “வதனம்” விமர்சனக் கூட்டத்தில் மனுஷ்யபுத்திரன் இவரை சமகால இளம் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் என பாராட்டினார். உயிர்மை, உயிர் எழுத்து, காக்கைச் சிறகினிலே, புதுப்புனல், வடக்குவாசல் போன்ற சிற்றிதழ்களில்
இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
