கென்னத் பியரிங் 1902இல் அமெரிக்காவின் இல்லினோய்ஸில் பிறந்தார். Partisan Review எனும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். பத்திரிகை ஆசிரியராக, சர்ரியலியக்
கவிஞராக, வணிக நாவலாசிரியராக, காமக் கதைகள் எழுதுபவராக பல பரிமாணங்கள் கொண்டவர்
பியரிங். இவரது The Big
Clock பிரபலமான துப்பறியும் நாவல். கவிதைகளிலும்
புனைவுகளிலும் சீரழியும் நகர வாழ்வின் எதார்த்தமான, மனதை தொந்தரவு செய்யும்
சித்திரங்களை உருவாக்குகிறார். ரேமண்ட் கார்வர் இவர் மரபில் வருகிற சிறுகதையாளராக
கருதப்படுகிறார். பியரிங் 1930-40 வரையிலான அமெரிக்காவின் பெரும் பொருளாதார
நெருக்கடி காலகட்டத்தை பிரநித்துவம் செய்த கவிஞர்களில் ஆக முக்கியமானவராக
கருதப்படுகிறார். இவர் 1961இல் காலமானார்.
பியரிங்கின் சில கவிதை நூல்கள்:
· Angel Arms (1929)
· Poems (1935)
· Dead Reckoning: A
Book of Poetry (1938)
·
Collected Poems of Kenneth Fearing (1940)
