என்றோ அலிப் லைலா
என்றோ வைத்துக்
கொள்ளலாம்
அவளுக்கு விதம்விதமான
ஆண்குறிகளைப் பிடிக்கும்
அவள் எப்போதும்
தன்னுள் ஒரு
ஆண்குறியைப் புதைத்துக்
கொண்டு உறங்கவே
விரும்புகிறாள்
அப்போது உழுத
நிலத்தைத் தொட்டுப்
பார்த்தால் ஒரு சூடிருக்கும்
அது அவளுக்கு மிகப்
பிடிக்கும்
அவ்விதமே ஒவ்வொரு
புணர்ச்சிக்கு அப்புறமும்
அவள் தனது
அடிவயிற்றைத் தொட்டுப்
பார்த்துக் கொள்கிறாள்
நுரைவிட்டு கொதித்துக்
கொண்டிருக்கும் பெரிய
சதுப்பு நிலத்தில் நடப்பது
போல அவள் அப்போது
தன்னை உணர்வாள்
ஆண்குறிகளின் சுவை
கூட ரொம்பப் பிடிக்கும்
அவளுக்கு
நன்றாகக் கழுவப்பட்ட
விதைப்பந்துகளை
சொர்க்கத்தின்
கனிகளுக்கு இணையாகச்
சொல்வாள் அவள்
மலர்வதற்கு முந்திய
விடைப்புடன் இருக்கும்
ரோசாக்கள் போலிருக்கும்
அவற்றின்
மொட்டுக்களையும்
அவள் உண்ண மிக
விரும்புகிறாள்
உலகத்தின் மிகச்
சுவையான மாமிசம்
என்றதை அவள்
சொல்வதுண்டு
அவளுக்கு ஒரே
ஆண்குறியோடு காலம்
முழுக்க உறங்கும்
பத்தினிகளைப் பற்றிய
வியப்பு இருக்கிறது
அவர்கள் ஏன் எப்போதும்
தங்கள் யோனிகளை புண் போல
பொதிந்து காத்து
வருகிறார்கள் என்றும்
நிச்சயமாக அவள் வேசி
அல்ல
நிம்போ என்று பிராய்டு
சொல்வதும்
அவளைத்தானா என்றும்
அவளுக்குத் தெரியாது
நிச்சயமாக நீங்கள்
எடுக்கும் நீலப்படங்களில்
நடித்தவள் அவள் அல்ல
மற்ற நேரங்களில்
எல்லாம் அவள்
நல்லதொரு தாயாகவும்
மனைவியாகவும்
செவிலியாகவும்
டாக்டராகவும்
ஆடிட்டராகவும்
மந்திரியாகவும் கூடதான்
இருக்கிறாள்
இப்படி இருப்பதின்
அரசியலும் அபாயமும்
அவளுக்குப் புரிந்தே
இருக்கிறது
எல்லா ஆண்குறிகளின்
மறுபுறமும் ஆண்கள்
இருப்பதில்லை
என்பதையும்
உங்கள் தெய்வங்கள்
வேட்டை
நாய்கள் போல
அவள் மேலே
எப்போது வேண்டுமானாலும்
பாயத் தயாராய் இருக்கின்றன
என்பதையும் கூட
அவள் அறிவாள்
மற்றபடி
உங்களுக்கு நிலாவையும்
வானவில்லையும்
கோழிக்குழம்பையும்
பிடித்திருப்பது
போலத்தான்
அவளுக்கு
ஆண்குறிகளையும் பிடித்திருக்கிறது என்பதை
நீங்கள் அவளது அந்தரங்க
நண்பர் என்றால் மட்டும்
ஒருநாள் சொல்வாள்
