என் புனைவின்
திசையைக் கட்டளையிடும்
ஒருவனைத்
தோளில் சுமக்கிறேன்
நான் தாங்கிக் கொள்ளப்
பழகி விட்டாலும்
உனக்குச் சரி
எனக்கென்ன விதி
அவனைச் சுமக்க
1001 கதைகளில் ஒரு
புனைவைக் கூட
நீ படித்ததில்லையாவெனும்
என் நிழலின் நச்சரிப்புத்தான்
தாங்க முடியததாயிருக்கிறது
இப்போது நிழலைக்
கொல்லும்
நிஜங்களைப் பற்றித்
தீவிரமாய் யோசிக்கிறோம்
நானும் தோள்க் கிழவனும்