இம்முறை - வைகறை

இதே காகிதம்தான்,
இதே கிறுக்கல்கள்தான்

ஒருமுறை நத்தையின் நகர்தல்களாக;
ஒருமுறை மனம்பிறழ்ந்தவனின் மொழியாக;
ஒருமுறை கூடலுக்குப் பின்னான
படுக்கை விரிப்பாக;
ஒருமுறை கழுத்தறுபட்ட ஆட்டின் காலுதறல்களாக;
இம்முறை
என்ன செய்வதென அறியாது
பார்த்துக் கொண்டிருக்கும் படியாய்
முகம்பார்க்கும் கண்ணாடியாக!