சாலைத் தெரு - போகன் சங்கர்


உருசுக் குட்டியின்
கூர் தீட்டிய முலைகளிடமிருந்து
விடைபெற்று
லா ச  
சாலைத் தெரு
ஆ மாதவனிடம் போனார்
அங்கிருந்து இருவரும்
நகுலனிடம் சென்றார்கள்
நகுலனும் அவர் நாயும்
ஒரே வீட்டில்
தனித்தனியாக இருந்தார்கள்
சுசீலா எங்கே இருக்கிறாள்
என்றதற்கு
''சுசீலாவும் செத்துக் கிடக்கிறாள்''என்றார் நகுலன்

ஜகன்மித்யை
என்று கசிந்தார் லா ச ரா
துரும்பைத் துரத்திப் போகும் துரும்பும்
என்றார் மாதவன்
நிணக் கச்சோடம்
நிணக் கச்சோடம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
நகுலனின் நாய்
அவர்களை முறைத்துக் கொண்டிருந்தது
''அவனுக்கு இறைச்சி நாள் இன்று ''

என்றார் நகுலன்
''நேரம் போகப் போக

நாம் எல்லாரும்
அவனுக்கு இறைச்சிப் பொதிகளாய் மாறிக் கொண்டிருக்கிறோம் ''
என்றார் எச்சரிக்கையாக,
லா ச ரா கால்களை
இழுத்துக் கொண்டார்
ஒருக்கால் ..ஒரு கால்
என்று எழுதிக் கொண்டது அவர் மனம்
பிஜாய்ஸ் குப்பியைத் திறந்ததும்
பட்டு உத்தரியம் தொங்க
அந்தரியம்  இழுப
கம்பனும்
ஈசுவர மூலியுடன்
மீசை தளரா பாரதியும் வந்து சேர்ந்துகொண்டார்கள்
உங்களில்   யாரும் ராமச்சந்திரன் இல்லைய
என்ற கேள்விக்குப்  பிறகு அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்
இரண்டாம் கோப்பைக்கு மேல்
தீமையின் மலர்களை மாதவன் நெகிழ்த்திக் கொண்டிருந்தபோது
ஜாய்சும் ஹென்றி ஜேம்சும் வில்லியம் பாக்னரும் வந்து சேர்ந்து கொண்டார்கள்
பின்னர் ஹோமரும் ஷேக்ஸ்பியரும் கூட
வில்லியம் கார்லோஸ் வில்லியம்சும் ப கமிங்க்சும் மூச்சிரைக்க வந்து சேர்ந்தபோது
இறந்துகிடக்கும் சுசிலாவை  எந்தப்பக்கம் திறப்பது  என்று நகுலன் தனத
பூனையிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்
சுசிலாக்கள் திறப்பற்றவர்கள் என்று லாசரா சொன்னார்
,மார்புகளுக்கு நடுவில் கொத்தாய்ப் பிடித்துக் கொண்டு கிழித்துத்

திறப்பது  சிறந்தது  என்று  பூனை  சொன்னத
அதைக் கேட்டு நகுலனின்  கண்களில் இருந்து நீர் சொட்டியத
மாதவன் பூனையின்   நகங்களை விரித்துப் பார்த்து வியந்தார

விஷயம் கேள்விப்பட்டு
நான் போய்ச சேர்ந்த போது
மது தீர்ந்து போயிருந்தது
அவர்கள் போயிருந்தார்கள்