உனக்கும் எனக்குமான அஸ்தமனம் - அரிஷ்டநேமி



மாலைச் சூரியன்
செந் நெருப்பாகிக்
கொண்டிருக்கிறது.
முடிவற்ற ஒரு பயணத்திற்கான
தொடக்கத்தில் நீயும் நானும்.
உனக்கான மௌனத்தில் நீயும்
எனக்கான மௌனத்தில் நானும்.
வார்த்தைகளை உடைத்து
கடைசியான ஒரு கவிதை கேட்கிறாய்.
'அஸ்தமனத்திற்கான பின் விடியல் ஏதுஎன்கிறேன்.
உடைப்பட்ட வார்தைகளில் வலி
உன் கண்களில்.
என்றோ ஒரு நாளின் பயணத்தில்
உனக்கான சூரிய அஸ்தமனம் தெரியலாம்.
எனக்கான சூரிய அஸ்தமனம் தெரியலாம்.
அந்த நாளில் நம் இருவருக்கும்
மௌனம் பொதுவாக இருக்கலாம்
அழகிய கனவுகளையும்
சலனம் கொண்ட நிஜங்களையும்
தனித்தனியே சுமந்து