-
- சானட் 20
இயற்கை தூரிகை வரைந்த ஒரு பெண்ணின் முகம் உனது
என் இச்சையின் காதலன்-காதலியே;
ஒரு பெண்ணின் மிருதுவான குணம், ஆனால்
பெண்களைப் போல் இம்மென்றால் மாறாதது.
அவர்களை விட ஒளியில் துலங்கும் கண்கள்,
உருட்டுகையில் குறைவான போலித்தனத்துடன்.
பார்க்கும் ஆளை மலடாக்குகிற கண்கள்;
வண்ணங்களிலான மனிதன் நீ, அத்தனை நிறங்களும் உன் கட்டுப்பாட்டில்,
அது ஆண்களின் கண்களை கொள்ளை கொள்கிறது,
பெண்களின் ஆன்மாவை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஒரு பெண்ணாய் நீ முதலில் படைக்கப்பட்டாய்
ஒரு பெண்ணாய் நீ முதலில் படைக்கப்பட்டாய்
ஆனால் உன் மேல் பித்தான இயற்கை
ஒரு பொருளை சேர்த்து என்னை முறியடித்தாள்
ஒன்றை சேர்த்து என் நோக்கத்தை புழையில்லாமல் செய்தாள்
அவள் தன் பெண்மை போகத்திற்காய் உனக்கு
ஒரு ஆண் குறியை பொருத்தினதால்
என் காதல் எனதாகவும் உன் காதல் அவர்களின் பொக்கிஷமாகவும் இருக்கட்டும்.
சானட் 52
சாவி கொண்டு தனது இனிய
பொக்கிஷத்தை பூட்டி வைத்து
அவ்வப்போது எடுத்துக்
காணுற்றால்
இன்பத்தின் முனை மழுங்கி
விடும் என அஞ்சுபவனைப்
போன்ற செல்வந்தன் நான்.
அதனால் தானே விருந்துகள்
அவ்வளவு சடங்குகளுடன்
நீண்ட வருடத்தில் ஒருமுறை
அரிதாக நிகழ்கின்றன,
விலைமதிப்பற்ற கற்கள்
நகைகளில் குறைவாக பதிக்கப்படுவது போல
கழுத்து அட்டிகையில் உள்ள
சிறந்த அலங்காரங்கள் போல.
காலத்துள் நீ இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள் போல.
அல்லது ஒரு அலமாரிக்குள்
துணிகள் பதுங்கி இருப்பது போல,
ஒரு சிறப்பான தருணத்தை
உன்னத சிறப்பானதாக ஆசீர்வதிக்க,
உனது சிறைப்பட்ட குறியை
மலர வைக்க.
அடையும் போது வெற்றி கொள்ளவும்,
இல்லாமல் போகும் போது
எதிர்பார்த்திருக்கவும்
சாத்தியமளிக்கிற மதிப்புடையவனே
நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர் (1584-1661)