இரவு வர விரும்பாததால் - கார்சியா லோர்கா (தமிழில் பாலகிருஷ்ணன் ராமசாமி)


 Image result for garcia lorca

இரவு வர விரும்பாததால்
உன்னால் வர இயலாது
என்னால் செல்ல இயலாது

எனினும் நான் போவேன்
தேள் சூரியன் என் நெற்றிப் பொட்டினைத தின்னு மென்றாலும்
ஆயின் நீ வருவாய்
உன் நாவு உப்பு மழையால் அரித்த பின்

பகல்வர விரும்பாததால்
உன்னால் வர இயலாது
என்னால் செல்ல இயலாது

நான் போவேன்
நான் மென்ற செந்நிற இறைச்சித் தேரைகளுக்குப் பணிந்து
ஆயின் நீ வருவாய்
இரவின் சேறு நிறைந்த சாக்கடைகளின் ஊடாக

இரவோ பகலோ வர விரும்பாததால்
நான் உனக்காக இறப்பேன்
நீ எனக்காக இறப்பாய்