பூ மரங்கள் – பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி


 எனக்கான
பூக்களை
என்றும்
வீசுகிறாய்
நீ.
உன்
தலையிலிருந்து
உதிர்த்து.
*

*
உன் மீது சாய்ந்தே
என் இளைப்பாறல்-மனதிற்கு
எப்போதும் விழும்
ஒரு இலைத்தூரல்-சாட்சிக்கு.
*

*
எத்தனையோ
காதல் ஜோடிகள்
பெயரை
பச்சை குத்தி
போயினர்
அந்த பூங்காவின்
பெருமரத்தில்.
*

*
உன்
நிழல்
மறைவில்
பூவிதழ்
தொட்டு
சில
முத்தங்கள்
விளைந்தது.
*

*
அவர்கள்
பேசிய
சில
உரையாடல்கள்
பேசாத
சில
மௌனங்கள்.
நீ
கேட்டது.