ஃபெடிரிகொ கார்சியா லோர்காவின் கவிதைகள் - தமிழில் குமரகுரு

Image result for garcia lorca
பிரியாவிடை
நான் இறந்தால்என் இல்லத்து பால்கனியை திறந்து வையுங்கள்.
சிறுவன் ஆரஞ்சுகளைச் சாப்பிடுகிறான்.
(
என் பால்கனியில் இருந்து அவனை பார்ப்பேன்.)
உழவன் கோதுமையை அறுவடை செய்கிறான்.
(
என் பால்கனியில் இருந்து அந்தச் சப்தத்தைக் கேட்பேன்.)
நான் இறந்தால்என் இல்லத்து பால்கனியை திறந்து வையுங்கள்.


Farewell
If I die,
leave the balcony open.

The little boy is eating oranges.
(From my balcony I can see him.)

The reaper is harvesting the wheat.
(From my balcony I can hear him.)

If I die,
leave the balcony open! 
***************************

தரிசாகி போன ஆரஞ்சு மரத்தின் பாடல்
விறகுவெட்டி. என் நிழலை என்னிலிருந்து வெட்டி விடு பழங்களின்றி நான் படும் வேதனையிலிருந்து விடுவி
நான் ஏன் கண்ணாடிகளுக்கு நடுவில் பிறந்தேன்நாட்கள் என்னைச் சுற்றி சுற்றி நகர்கின்றனஇரவு என்னை அதன் விண்மீன்களில் பிரதி எடுத்துக் கொள்கிறது
என் பிம்பங்களைத் துறந்து வாழ விரும்புகிறேன்அதன் பிறகு நான் கனவில் காணும்
எறும்புகளும் தாத்தா பூக்களும் இலைகளும் கிளிகளுமாக 

 The Song of the Barren Orange Tree

Woodcutter.
Cut my shadow from me.
Free me from the torment
of being without fruit.

Why was I born among mirrors?
Day goes round and round me.
The night copies me
in all its stars.

I want to live without my reflection.
And then let me dream
that ants and thistledown
are my leaves and my parrots.


***************************

 குட்டி ஊமை சிறுவன் 

சிறுவன் தன் குரலை தேடுகிறான்.
(
அதுவோ கிரிக்கெட் பூச்சிகளின் ராஜாவிடம் சிக்கி கொண்டிருக்கிறதுஒரு நீர் சொட்டில் தன் குரலை தேடுகிறான்.
பேசுவதற்காக நான் அதைக் கேட்கவில்லை நான் அதை ஒரு மோதிரமாக்குவேன் அவன் என் மௌனத்தை தன் சிறுவிரலில் அணிந்து கொள்வான்
ஒரு நீர் சொட்டில் தன் குரலை தேடுகிறான்.

(
சிறைப்பிடிக்கபட்ட அவன் குரல்தொலைவில் எங்கோ கிரிக்கெட்டின் உடைகளுக்கு மாறியிருந்தது)
The Little Mute Boy
The little boy was looking for his voice.
(The King of the crickets had it.)
In a drop of water
the little boy was looking for his voice.

I do not want it for speaking with;
I will make a ring of it
so that he may wear my silence
on his little finger.

In a drop of water
the little boy was looking for his voice.

(The captive voice, far away.
Put on a cricket' clothes.)

***************************
 கிடார் 

கிடாரின் அழுகை துவங்குகிறதுவிடியலின் கோப்பைகள் சுக்குநூறாக உடைக்கப்படுகின்றனகிடாரின் அழுகை துவங்குகிறதுஅதை அமைதி படுத்துவதால் ஏதும் பயனில்லைஅதை அமைதி படுத்துவது சாத்தியம் இல்லைசலிப்பூட்டும்படி அழுகிறது நீரும், காற்றும் பனிக்காடுளில் அழுவதைப் போல்அதை அமைதிப் படுத்துவது சாத்தியம் இல்லைகிடைக்காத பொருள்களுக்காக அழுகிறதுசுடும் தெற்கு பாலைவன மலர்கள் வெண்கேமீலிய பூக்கள் மீது ஏங்குவதைப் போலஇலக்கற்ற அம்பைப் போல காலையைப் பிரிந்து வாடும் மாலையைப் போல கிளையில் முதலில் இறந்த குருவிக்காககிடார்இந்த ஐந்து வாள்களும்
இதயத்தில் ஆறா ரணமேற்ப்படுத்தி விட்டன


The Guitar
The weeping of the guitar
begins.
The goblets of dawn
are smashed.
The weeping of the guitar
begins.
Useless
to silence it.
Impossible
to silence it.
It weeps monotonously
as water weeps
as the wind weeps
over snowfields.
Impossible
to silence it.
It weeps for distant
things.
Hot southern sands
yearning for white camellias.
Weeps arrow without target
evening without morning
and the first dead bird
on the branch.
Oh, guitar!
Heart mortally wounded
by five swords.