எலிப்பொறி - மணிபாரதி





இரு பக்கமும்
மரப்பலகையின் தடுப்பு,
ஒரு புறம் கம்பி,
மறுபுறம் இழுப்பு
விசையிலான கதவு,

நடு கொக்கியில் நெருப்பில்
வாட்டப்பட்ட தேங்காய் துண்டு,

மாட்டுமோ.தப்பிக்குமோ
என்ற சந்தேகத்தை தீர்த்தது,
நள்ளிரவில் ஒளித்த படீர் ஒலி,

காலையில் கண் விழித்ததும்
விரைந்து சென்று பார்த்த போது,
தப்பித்தலுக்கான கோபமும்,
ஆக்ரோசமும் ஓய்ந்து
காணப்பட்டது,
நீண்ட வாலுடன் கூடிய எலி,

கழி நீர் ஓடையில் விட்டு
கொண்டிருந்த போது
ஊரிலிருந்து வந்த அப்பா
சொல்வது கேட்டது
“ஒருவா சோத்துக்கு
எப்படித் தான் இந்த
பொந்து இடத்திலாம்
இருக்கியோ”