உருவமற்றது - மணிபாரதி




எனது ஒரு கவிதை தாளை
உங்கள் முன் நீட்டினேன்
அதை வாங்கிய
நீங்கள் வாசிக்கலாம்,
விமர்சிக்கலாம் அல்லது
நான் நகர்ந்தபின்
வீசியெறிந்து விடலாம்

என்ன‌ செய்து விட‌ முடியும்
அந்த‌ க‌விதையால் உங்க‌ளை,
அது ஒரு க‌விதை தான்
என உங்கள் ம‌ன‌தில் ஏற்ப‌டுத்திய‌
சிறு ச‌ல‌ன‌த்தை த‌விர‌.