மய்யம் - கலாப்ரியா
 முட் கூர்மையின்
 முதல் சந்திப்பு 
உடலில் ஒரு புள்ளியில் தான்

 கில்லெட்டின் 
முதலில் எழுதும்
நீள் ரத்த

 நேர் கோட்டிலேயே
 உடல் முண்டம்
 உறுதி செய்யப்படுகிறது

 சுக்கிலம்
 துளைக்கும் ஒற்றைச்
 சுரோணிதத்திலொரு
 புள்ளியில்
 உறுதி செய்யப்படுகிறது
 ரத்தமும் சதையுமாய்
 உயிர்