தேவாலய கல்லறையில் ஒரு மனிதன்
-
பெர்னர்ட்
கட்டெரிட்ஜ்
-
தமிழில்
ஆர்.அபிலாஷ்
யாரென தெரியாது யாரும் கேட்டிராது வருகிறான் அவன், வந்து அங்கு
நிற்கிறான்.
மூச்சே வராது சுவாசிக்கிறான், கைகள் சதையையும்,
ஊன்றுகோலையும் பற்றுகின்றன. சிறு
குன்றுகள்
மீதாய் துள்ளிச் செல்கிறான்
தன் பாதங்கள் நிலத்தில் பதிந்து ரோஜாக்கள் மிதக்கும் ஒரு குவளையில்
இறங்க.
முட்டாள் கல்லறைகளை உதைக்கிறான்
சத்தமாய் சில ஆசைகளை பிளந்து மரச்சிலுவைகளை தனக்கு செய்கிறான்
சிரிப்புடன் அவற்றை சுமந்து எடுத்து நாத்திகனின் அத்திமரத்தில்
தொங்க விட கொண்டு செல்கிறான்
திறந்த வாசல் வழி பல்டி அடித்து போகிறான்
வருகையாளர் பதிவேட்டில் ஸ்வஸ்திக குறியால் ஒப்பமிடுகிறான்
பிறகு மூடின இரும்பு வாயில் கதவு வழி போகிறான்
தன் சட்டைப்பொத்தான் துளையில் பேன்ஸி பூ சூடியபடி