அறியாத்துயில் - பா.சரவணன்


நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
யாரோ என்னை அழைக்கிறார்கள்
சிலர் என்னைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்
ஒருவன் என்னை என்ன செய்வதென்று
யோசித்துக்கொண்டிருக்கிறான்
மற்றவன் என்னை வணங்கிகொண்டிருக்கிறான்
யாரோ முதுகில் குத்துகிறார்கள்
யாரோ முத்தமிடுகின்றனர்
யாருடைய கனவிலோ யாரையோ
அணைத்துக்கொண்டிருக்கும் நான்
யாரோ போல
தூங்கிக்கொண்டிருக்கிறேன்