மஸ்ஸர்ரியலிசம்:புதிய புரிதலுக்காக - எச்.முஜீப் ரஹ்மான்
நவீன கலை உத்திகளான சர்ரியலிசம்,கூபிசம் போல பின்நவீனத்தில் சில கலை உத்திகள் இருக்கிறது. சில பதிற்றாண்டுகளாக கலையுலகில் பல கருத்தாடல்கள் பாதிப்பு செலுத்துவது நடைப்பெற்று வருகிறது.வரலாறு புதிய பார்வைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறது.கலையனுபவங்கள் பல நூற்றாண்டு முழுவதும் செல்வாக்கு செலுத்துகின்றன.எனவே புதியவை பற்றியவை குறித்து தொடர்ந்து பேசப்படமுடிகிறது.கலையின் அடுத்த இயக்கம் என்னவாக இருக்கும் என்று தொடர்ந்து சிந்திக்கப்படுகிறது.கலைஞர்களைப் பொறுத்தவரை எதுவும் தேவையற்று போய்விடுவதில்லை.புதியன செய்யவேண்டும் என்கிற உத்வேகமே பல பரிசோதனைகளுக்கும் காரணமாகிறது.நவீன கலை இயக்கம் 1870ல் இருந்தே பலவிதமான பரிசோதனைகளை செய்துகொண்டிருக்கிறது.


தொடர்ச்சியான செயல்பாடுகளினிமித்தம் பார்வைகளும்,வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் குறிப்பிடும்படியான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.மஸ்ஸரியலிசம் எனும் கருத்தாக்கம் ஸர்ரியலிசத்தின் பாதையில் தொழிற்பட்டு படிமயாக்கம் மற்றும் மக்கள்திரள் ஊடகங்கள் வழியாக சாத்தியமாகியுள்ளது.ஒரு தர்க்கம் வரலாற்று தர்க்கமாக மாறுவதை தான் மஸ்ஸர்ரியலிசம் வலியுறுத்துகிறது.
கலைவரலாற்றில் தர்க்கத்தை பார்கும் போது நவீன கலை மூன்றுமுக்கிய மரபுகளிலிருந்து பல மாதிரிகளையும் காட்சியாக்க படைப்பற்றலையும் பெற்றிருக்கிறது.எக்ஸ்பிரசனிசம்,அப்ஸ்டிராக்சன்,சர்ரியலிசம் எனும் முறையியல் மூலம் நவீன கலை செல்வாக்கு செலுத்தியது. இம்மூன்று உத்திகளும் வித்தியாசமான பார்வைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் கலை,இலக்கியத்தின் அழகியல் பார்வைகள் குறிப்பிடும் படியான மாற்றம் பெற்றது.எக்ஸ்பிரசனிசத்தை பொறுத்தவரை உணர்வுகளின் வெளிப்படுகளை கொண்டிருந்த போதிலும் எதார்த்தம் பற்றிய புதிய புரிதல் உருவாக நேர்ந்தது.சாராம்சவாதத்தைப் பொறுத்தவரையில் எதார்த்தத்துக்கு அப்பாலுள்ள தோற்றங்களும்,பார்வைகளும் இயல்பை மாற்றியமைத்தது.சர்ரியலிசம் வேறு விததில் நனவிலி மன நிலையை துல்லியமாக  வெளிப்படுத்தியது.கனவுகள்,தனியங்கி உணர்வுகள்,ஆழ்ந்த சிந்தனைகள் மனத்தை விழிப்படையவைத்து கொண்டு வெளியாயின.சர்ரியலிசத்தின் பாதிப்புகள் தான் நவீன கலை,இலக்கியத்தின் ஆகமொத்தமான வித்தியாசகுணம்

என்ற வகையில் மிகப்பெரும் அதிர்சிகளை அளித்தது. கொதிக்கும் மனநிலைக்கும்,எதார்த்தத்துக்கும் ஆன உறவிலிருந்து கனவுகள் வெளிப்பட்டதால் அவ்வனுபவம் மிகையதார்தம் என்றழைக்கப்பட்டது.இம்மூன்று உத்திகளை பொறுத்தவரை புறபதிவுவாதம் உளவியலாகவும்,சாராம்சவாதம் கட்டுக்கடங்காத நிலையையும்,மிகையதார்த்தம் உருமாற்றம் செய்வதாகவும் அமைந்தது.மூன்று மாதிரிகளும் தன்னளவில் பாதிப்பு செலுத்துவதாக அமைந்த போதிலும் சர்ரியலிசம் ஒரு படி மேலாக தொடர்ந்து நடைபயின்று கொண்டிருந்தது.பின்நவீன யுகத்திலும் அதன் பாதிப்புகள் இருந்துக்கொண்டிருக்கிறது.சர்ரியலிச உருமாற்ற அணுகு முறையை ஏற்றுக்கொண்டு சாதாரண அனுபவத்தை உணர்வுபூர்வமானதாக மாற்றும் பார்வைகளை பின்நவீன படைப்புகள் பிரதானமாக கொண்டிருக்கின்றன.சர்ரியலிசத்தை உள்வாங்கிக்கொண்டே படைப்புலகம் விரைவில் மஸ்ஸர்ரியலிசம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.ஆரம்ப நிலையில் இது காட்சி கலைஞர்களை மாத்திரம் சென்றடைந்தது.அவர்கள் ஊடகங்களில் படிவுருவியலுக்கு இதை தொழில்நுட்பங்களுடன் முயன்று பார்த்தனர்.மஸ்ஸர்ரியலிசம் ஒரு கலை இயக்கமாக இன்று மேற்குலகில் அதிகம் செல்வாக்கை செலுத்துகிறது.மரபார்ந்த கலையனுபவங்களில் இருந்து மிகையதார்த்த பண்புடன் ஊடக காட்சிகளில் தர்க்கங்களுக்குட்பட்டு சித்திரபடுத்தியதால் அசாதரண தோற்றம் பெற்றுவிடுகிறது.நவீன கலையை தகவல் தொழில்நுட்பத்துடன் இணைத்திருப்பதால் வடிவிலும் உள்ளடக்கத்திலும் புதுமைமிக்கதாக ஆகிவிடுகிறது. 

புகைப்ப்டக்கலையையும்,வரைகலையையும்,புதிய தொழிநுட்பத்தில் கொலாஜ் பாணியில் எதார்த்ததை வேறு மாதிரிகளில் செய்து காட்டினார்கள்.இத்தன்மை மஸ்ஸர்ரியலிசத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.மேக்லுஹான்,ஈட்வார்டு மைபிரிட்ஜ் போன்றோர்கள் குறிப்பிடும் படியான கலைப்படைப்புகளை உருவாகினர்.சர்ரியலிசத்துக்கும்,நவீன ஊடகத்துக்குமான  உறவாக இவை இருந்தபோதிலும் பொது உளவியலில் அகத்துக்கும்,புறத்துக்குமான புது வடிவம் உருவாக நேர்ந்தது.மார்ஸல் மேலுஹான் உருவாகிய இந்த புது மனோபாவம் ஆல் அட் ஒன்ஸ் என்றழைக்கப்பட்டது. மஸ்ஸர்ரியலிசம் ஒரு இயக்கமாக உருவாகிய போது ஜேம்ஸ் சீகாபர்,கின்னி கார்டினர்,செசில் டச்சன்,மோரிஸ் போன்றோர்கள் அதை முன்னெடுத்து சென்றனர்.ஜேம்ஸ் சீகாபர் மஸ்ஸர்ரியலிசம் என்றால் என்ன என்று சொல்லும் போது பலவடிவங்களில் வெளிப்படும் படைப்பனுபவம் சர்ரியலிச நோக்கில் விர்ச்சுவல் எதார்த்தமாக மாறுவதை இப்படி அழைக்கலாம் என்றார்.ஆனால் அலக்ஸ் பிலிப்ஸ்சன்கோ எனும் ரஷ்ய கலைஞர் இவ்வகை படைப்புகளை மெட்டாரியலிசம் என்றழைத்தார்.மெட்டாரியலிச வகையில் மஸ்ஸர்ரியலிசத்தை அடக்கினாலும் அது வேறுபடுமிடம் இருக்கதான் செய்கிறது. மஸ்ஸர்ரியலிசம் என்பது எதார்த்தையும் கற்பனையையும் நனவிலிருந்து நனவுலியாக மாற்றும் உத்தி என்று சொன்னார்.மேலும் மாஸ் எனும் மக்கள் வாழும் புற உலகையும் சர்ரியல் எனும் அக உலகையும் சித்தரிப்பது என்ற விளக்கமும் இருக்கிறது.

மஸ்ஸர்ரியலிசம் தான் கடைசி எதார்த்தம் தெ உல்டிமடெ ரெஅலிச்ம் என்று சொல்லப்படுகிறது.பொது ஜனபண்பாட்டிலுள்ள குறிகளையும்,சித்திரங்களையும் காட்சிப்படுத்துவது இதிலுள்ளதாகும்.மக்கள்திரள் என்பதிலுள்ள டிவி,இணையம்,விளம்பரம் போன்றவை சொல்லும் கடிகாரம்,வாகனங்கள்,டிரயின்,ஜெட் விமானம் போன்றவையும்,பண்பாட்டிலுள்ள சோட கேன்,ஸும்மிங் பூல்,பீச் பால்ஸ் போன்றவற்றையும் அறிவியல், எனர்ஜி போன்றவற்றுடன் இணைப்பதும் இவ்வுத்தியில் காணப்படுகிறது. மஸ்ஸர்ரியலிசத்தில் தினவாழ்வை பார்க்கும் பார்வையும்,எதார்த்தத்தை
சர்ரியல் விசயங்களான கனவுகள்,நம்பிக்கை,பயம்,விருப்புகள், விளங்கமுடியா அடிமன புதிர்களுடன் இணைப்பது முக்கியமாகும்.

21ஆம் நூற்றாண்டின் மாபெரும் கலை,இலக்கிய இயக்கம் என்று சிறப்பிக்கபட்டுள்ள மஸ்ஸரியலிசம் புகழ்மிக்க ஓவியர்களையும்,கவிஞர்களையும் மற்றும் பல படைப்பாளிகளையும் கவர்ந்து வளர்ந்து வருகிறது.பின்நவீன கலையாக்கங்களில் சிறப்பிடம் பெற்றுள்ள மஸ்ஸர்ரியலிசம் ரஷ்யாவில் மெட்டாரியலிசம் என்றழைக்கப்பட்டதாக முன்னமே பார்த்தோம்.படைப்பிலக்கியத்தில் இதன் தாக்கம் பெருமளவுக்கு இருக்கிறது.

சிலர் மெட்டாரியல் கவிதை என்றும்,சிலர் மெட்டாமார்பிஸ் கவிதை என்றும் அழைக்கிறார்கள்.மஸ்ஸர்ரியலிசத்தில் சிம்பாலிசமும்,சர்ரியலிசமும் இணைந்து செயலாற்றுகிறது என்று விமர்சகர்கள் அவிப்பிராயப்படுகிறார்கள். தமிழ் சூழலில் என்.டி.ராஜ்குமார் கவிதைகளில் மஸ்ஸரியலிச கூறுகள் தென்படுவதை ஆச்சரியமாக தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

1. வெள்ளைச்சுவரில்
கரிக்கட்டையால் வரைந்த மரங்களை அழித்தபோது
கலைந்த பறவைகள்
எனது சொப்பனத்தில் வந்து உட்கார்ந்து கொண்டன

கனவில் பெய்த மழையில்
நனையாமல் வந்த நான்
தூங்காமல் தூங்கிக் கொண்டிருந்தபோது


இசக்கியம்மையின் கதைப்பாடலை
பாடிக் கொண்டாடிக் கொண்டிருந்தன
மண் ரேடியோ குத்தவைத்திருக்கும் புளியமரம்

சிரட்டைகளையும் நுங்குவண்டிகளையும்
தொலைத்த நான்
கதைகளையும் விளையாட்டுகளையும் போட்டு வைத்திருந்த ஓலைப்பெட்டியைத் தேடியபோது
அம்மா சொன்னாள்  "காக்கா" கொண்டு போச்சு

2. நாகலிங்க பூவிற்குள் பூலிங்கமும் பூலிங்கத்திற்குள் நாகலிங்கமும்
வரைந்து கொண்டிருந்த பரமனை பூப்பந்து முலையது செருக்கு முலையாகி
எழுந்து தாக்கியது
மேலும்
சந்ராயோகத்தில்
சரமழை உதிர்த்து பூங்கிணர் திறக்க
காதளவு கண்ணுடையாளும்

உளிமுனைக் கூத்தாடியும்
கோலங்கள் பல செய்து புணர்ந்து தீர்த்தனர்

கவிதையின் ”மையப்பொருளே, பாடுபொருளே” அடிக்கருத்து எனப்படும். இவ்அடிக்கருத்து ஓர் இலக்கியப் படைப்பில் அத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளால் உருவாக்கப்படும். இந்நிகழ்ச்சிகள், உவமை, உருவகம், அடைமொழி என்று எதுவாகவும் இருக்கலாம். அடிக்கருத்துடன் தொடர்புடைய இந்நிகழ்ச்சிக் கூறுகளையே கவிதைத் திறனாய்வாளர்கள் ”கவிதைக்கூறுகள்” என்பர். இக்கவிதைக் கூறுகள் ஓரிலக்கியப் படைப்பை உருவாக்கவே புனையப்படுகின்றன. எனவே, இவற்றைக் ”கலைப்புனைவுக்கூறுகள்” என்றும் குறிப்பிடுவர். ஓரிலக்கியத்தைப் படைக்கும் பொழுது படைப்பாளன் திரும்பத்திரும்ப சில கூறுகளைத் தவிர்க்க முடியாது பயன்படுத்துவான். அங்ஙனம், இலக்கியப் பாடுபொருளுக்கு நெருக்க உறவுடையதாகத் திரும்பத்திரும்ப வரும் புனைவுக் கூறுகள் ”தலைமைப் புனைவுக்கூறுகள்” எனப்படும். இத்தலைமைப் புனைவுக் கூறுகளைத்தான் ஆங்கிலத்தில் ”மோட்டிப்வ்” என்று அழைக்கின்றனர் (செ. சாரதாம்பாள், அடிக்கருத்தியல் கொள்கைகளும் திறனாய்வு அணுகுமுறைகளும், ப.8). இவ்வாறு உருவாக்கப்பட்ட தலைமைப் புனைவுக் கூறுகள் கூட்டுச்சேர்க்கையினாலேயே ஒரு பெரிய அடிக்கருத்தின் முழு உருவ அமைப்பும் அமைகிறதைக் காணமுடிகிறது. இவ்வகையில் ஒவ்வொரு பாடலையும் ஆய்வு நோக்கில் பார்க்கும்பொழுது நிகழ்ச்சிகளும், சூழல்களுமே தலைமைப் புனைவுக்கூறு உருவாக்கத்திற்குப் பெரிதும் காரணமாய் அமைகிறது என்பதைக் கண்டுணர முடிகிறது.

சாகக்கிடந்தாள் அம்மா
மருத்துவர் சொன்னார் கர்ப்பப்பாத்திரத்தை
எடுத்துவிடவேண்டுமென்று.


எனது முதல் வீடு இடிந்து தலைகுப்புற வந்து விழுந்த

வேற்றுலக அதிர்ச்சி
எனது மூப்பனின் சுடலையிலிருந்தொரு ஜோதி ஒரு முட்டையின் வடிவில் பறந்து சென்று

இளமையை வாரிக்குடித்த மயக்கத்தில்
ஒரு தீக்கொழுந்தைப்போல் நின்றுகொண்டிருந்த
அம்மாவின் வயிற்றில் சென்றது கிளிக்குஞ்சாகிக் கொண்டது.

மண்ணெடுத்துச் சுட்டுப்பொடித்து அரித்துத் தின்றாளவள்
மண்வாசனை முதலில் வந்தப்பிக்கொண்டதப்படி.

மாடன் கோவில் திருநீறை மடியில் கட்டிவைத்து அள்ளித்தின்ன நானந்த சாம்பல் கிண்ணத்தில் பாதுகாப்பாய் மிதந்தேன்.

பாம்புகள் புணருமொரு பௌர்ணமி நாளில்மணக்கும் மரவள்ளிக்கிழங்கைப்போல் பூமியில் வந்திறங்கிய
  என்னுடலில் ஒட்டிக்கொண்டிருந்த அழுக்கை
தெற்றிப்பூ, கஸ்தூரி மஞ்சள், சிறுபயறு பொடித்துத் தேய்த்து

குளிப்பாட்டி முலைப்பால் தந்து உறங்க வைத்த அம்மா குடல்புண்ணில் வயிறு நொந்து ஏங்கி அழுகிறபோது


முண்டு மொருவீடு இடிந்தென் தலையில் வீழுமோவென

மூப்பனின் குரலில் அழுகிறது கிளிநெஞ்சு.

********
இப்பமெல்லாம் பழைய சூரியனா உதிக்குது பழைய மழையா பெய்யிது

பேரு தெரியாத்த பூச்சிகளொக்க
புதுசு புதுசா மொளைக்குது

ஒலகம் போகுது இந்தப் போக்குல
இதுல என்னடான்னா ஏதோ ஒரு நீக்கம்புல போவான்
எழுதிவச்சுட்டு செத்தானாம்

காது இவ்வளவு அகலம் மூக்கு இவ்வளவு பெரிசு கைகாலு நீளம் கவுட்டைக்க எடையில கெடக்குறது
எல்லாத்தையும்
இப்பம் கொஞ்சம் தலதெறிச்சு போறவனுக வந்துமலைய விட்டு தாளோட்டு குடிய மாத்துங்குறானுக

பொறம்போக்குல சாய்ப்பு கெட்டுனா அவுத்துட்டு ஓடுங்குறானுக
படிச்ச புள்ளையளுக்கு சர்க்கார்உத்தியோகம் கொடுக்கமாட்டங்குறானுக

எங்க குட்டிச்சாத்தானப்போல
உருண்டோடுகிற பழைய மேகமே
நீ விடுகிற இடிகளெல்லாம் இவனுகளுக்கத் தலையிலபோய் விழாதா.

***********
கவிதையின் வடிவம் குறித்த தெளிவான சிந்தனை தொல்காப்பியருக்கு இருந்தது. தொல்காப்பியச் ‘செய்யுளியல்’ அதனை வெளிப்படுத்துகிறது. கவிதையின் புறவடிவம் பற்றி மட்டுமன்றி அகவடிவம் பற்றியும் அவ்வியல் விரித்துரைக்கிறது. கவிதையில் வரும் எழுத்தின் மாத்திரை தொடங்கி அதன் வனப்புகள் ஈறாக 34 உறுப்புகளைச் செய்யுள் இலக்கணமாகத் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என நால்வகைப் பாக்களின் இலக்கணத்தையும் மருட்பா இலக்கணத்தையும் தந்துள்ளார். கவிதை ஒலிஇனிமை, இசைமை அமைந்த வடிவம் பெறுவது என்பதை அவரது கோட்பாடாகக் காண்கிறோம். எவ்வகைப் பொருள்களை எவ்வகை வடிவங்களில் பாடவேண்டும் என்ற வரையறையையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை கண்டவற்றிலிருந்து தொல்காப்பியரின் கவிதைக் கோட்பாடுகளைக் கீழ்வருமாறு தொகுக்கலாம்.

1. மனித வாழ்வின் இருபெறும் கூறுகளை அகம், புறம் என்னும் வகைப்பாட்டில் வார்த்தளிப்பது கவிதை.
2. உலகியலை அடிப்படைக் கருவாகவும் புனைந்துரையை அக்கருவைச் சுவைபட வெளிப்படுத்தும் வெளிப்பாட்டு முறையாகவும் கொண்டது கவிதை.
3. முதல், கரு, உரி, கூற்று, துறை எனும் அமைப்புகள் புனைந்துரையின் செயல்பாட்டிற்கு உதவும் அடிப்படைக் கூறுகள்.


4. கவிதை ஓசை இனிமையை இன்றியமையாத வடிவ ஒழுங்காகக் கொண்டு அமைவது. கவிதையின் வடிவமும் வனப்பும் அதன் உட்பொருளுக்குப் பொருத்தமாக அமைபவை. அதுபோல,தற்காலக் கவிதைகள் பின்வரும் நவீனத்துவக் கூறுகளைப் பெற்று வருகின்றன:-

1. கவிதை மரபைப் புறக்கணித்தல்.

2. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு.

3. வாசகனுக்கு சிந்திக்க இடம் அளித்தல்.

4. பூடகத்தன்மை.

கவிதை மரபைப் புறக்கணித்தல்: 

தற்காலக் கவிஞர்கள் தனக்கென்று விதிக்கப்பட்டிருந்த உவமை, உருவகம், அணி, பாவகை, எதுகை, மோனை இயைபு போன்ற மரபுகளை நீக்கி கவிதை இயற்றுகின்றனர். உரைநடையைச் சிதைத்துக் கவிதையாக எழுதுகின்றனர். நேரில் பேசுவது ஒரு நேர்முகத்தன்மையுடன் இருக்கிறது. இன்றைய நவீனக் கவிஞர்கள் பலரும் இம்முறையைப் பின்பற்றி எழுதுகின்றனர்.

மஸ்ஸரியலிசம் நவீன கவிதைக்கூறுகளையும்,புராதன செவ்வியல் கவிதைக்கூறுகளையும் இணைத்து பின்நவீன வடிமாக மஸ்ஸரியலிச கவிதை கூறுகளாக ஆக்கித் தருகிறது.


பண்டுபண்டொரு காலமிருந்தது
சின்னச்செடியைப் பறிக்கமுயன்றால்கூட
கதிர்கம்பெடுத்து அடிக்க வருவாளாம் காட்டுக்கிழவி
பட்சி பறவைகள் படுக்க மடிகொடுத்து நிற்கும் மரம்

அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் கருடக்கொடி
விஷம் முறிக்க வளரும் வேர் பறிக்க
மரம் செடி கொடிகளிடம்
உத்தரவு கேட்டு நிற்பான் மூப்பன்

கொடுங்காற்றாய் வரும் மந்திரமூர்த்தி

ஒரு வேர் பிழுதால்
ஐந்து மரம் செடி கொடிகளை நட்டுவைக்கச் சொல்லி
பயமுறுத்திச் செல்வான்

புராதனமக்களின் தெய்வங்கள்
மரம் செடி கொடிகளாய் வளர்வதுண்டு
எந்தக் கிளை அல்லது கொடி சாபமிட்டதோ
மலைகளைச் சுரண்டித் தின்னும் மானங்கெட்ட ராச்சியத்தில் காய்ந்த சுள்ளிகளாய் நீண்டு குத்துகிறது

சூரியக் கம்புகள்.


உலகியல் வழக்கிலிருந்து எடுத்துக் கொண்டு, புனைந்துரை எனப்படும் நாடக வழக்கைப் பொருத்தமுறக் கலந்து படைப்பது கவிதை என்கிறார் தொல்காப்பியர். ‘உலகியல் வழக்கை இலக்கிய நயம்படப் புனைந்துரைக்கும் முறையே நாடக வழக்கு, இரண்டும் பிரிந்து நிற்பன அல்ல’ எனத் தமிழண்ணல் சுட்டிக் காட்டுவதை (சங்க இலக்கிய ஒப்பீடு, ப.22) இங்கு நினைவிற் கொள்ள வேண்டும். உலகியல் வழக்கே கவிதையின் கரு. அதனை எடுத்துச் சொல்லக் கவிஞன் பயன்படுத்தும் புனைந்துரை - வெளிப்பாட்டுக் கற்பனை - நாடக வழக்கு. இப்புனைந்துரைக்கு உதவுவனவே முதல், கரு, உரி, கூற்று, திணை, துறை எனும் அமைப்புகள்.

உலகியல் வழக்கை அப்படியே நடைமுறைப்படி எடுத்துக் கொள்ளாமல் சுவை கருதியும் நாகரிகம் கருதியும் சிலவற்றைக் கொண்டும் சிலவற்றைத் தள்ளியும் ஏற்கும் ஒரு தணிக்கை முறையும் நம் கவிதை மரபில் இருந்துவந்திருக்கிறது. அதனால் தொல்காப்பியரது கவிதைக் கோட்பாடு குறிக்கோளியம் சார்ந்ததாக உள்ளது. பாவகைகளின் பயனைக் கூறும் தொல்காப்பியர் கவிதை அறம் பொருள் இன்பம் மூன்றும் பயப்பது என்கிறார்.

அந்நிலை மருங்கின் அறம்முத லாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப.
(தொல்.பொருள், செய்யு.102)


நோயுற்ற எல்லாவற்றிற்கும் மருந்து கொடுக்கிறான் மூப்பன்
எல்லோரும் பயன்படுத்திப்போட்ட சொத்தையான சொல்லுக்கு

அடர்த்தியான வாக்கைப் பயன்படுத்துகிறேன்


அப்பனின் மருந்துப் பெட்டிக்கள் மூளையெனும் வார்த்தை

சிரச்சோறாக வந்து சமைகிறது
சொற்கள் ஒவ்வொன்றும் கவிதைக்கிளிகளாக மாறி
காட்டின் மௌனத்தினிடையே சிலம்பி மறைந்தொரு
தவத்தைப் பரப்புகிறது
நானும் ஒரு கண்தெரியாதவனைப்போல மிக சூசகமாகவும் கவனமாகவும் அடியெடுத்து வைக்கிறேன்
எனது உயிரெழுத்தின் குறுக்கே யந்த காட்டாளனின் புராதன நதி
ஓடிக் கொண்டிருக்கிறது.