அகோரப்பசி - பா.சரவணன்

         
                                                  

முகமூடி தொலைத்தவனின்
பசித்த வயிறு
காதைக் கடித்து நாக்கைப் பிளந்து
கண்ணைக் குத்தி தோலைச் சுருக்கி
மூக்கை உடைத்து ரத்தத்தை சுண்டவைத்து
நரம்பை இழுத்து சதையை உருக்கி
எலும்பை நொறுக்கி குறியைத் தளர்த்தி
இதயத்தைக் கிழித்து
கடைசியில் மூளையைச் சிதைத்து
தின்று செரித்தபின்
எஞ்சிய மயிருடன்
தவிக்கும் வேளையில்
கடவுளின் கையில்
காத்திருக்கும் முகமூடி…
நொடியில் கடக்கும் ஆறு பச்சை உடல்களில்
ஒன்றை
பழக்க தோஷத்தில் பற்றிக் கொள்கிறது