அது நீங்களாக கூட இருக்கலாம் — பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி


*
எல்லா
புகைப்படங்களிலும்
ஒளிந்திருக்கிறது
இதுவரை
நாம்
பார்த்திராத
யாரோ
ஒருவருடைய
முகம்
*
எதேர்ச்சையாய்
எடுத்த
புகைப்படங்களில்
தான்
நீங்கள்
உண்மையாக
சிரித்திருப்பீர்கள்
*
பின்னாளில்
பார்க்கையில்
நீங்கள்
செயற்கையாக
சிரித்த
புகைப்படங்கள்
எந்தவித
விசேஷமான
நினைவுகளையும்
தாராது.
*
விலகிய
கோணங்களில்
எடுத்த
புகைப்படம்
தான்
அதிக
பிரியங்களை
சுமந்த ஒன்றாக
மாறிப்போகும்
*
பிரியமானவர்களின்
புகைப்படங்களை
நீங்கள்
இப்போது
எடுத்து
பார்த்தாலும்
அவர்களின்
கண்கள்
உங்களை
கண்டவுடன்
புன்முருவலிடுவதை
உங்களால்
மட்டுமே
உணர
முடியும்
ஒருமுறை
முயற்சித்து தான்
பாருங்களேன்.
*