அதன் பின் நாங்கள் குளிக்க விரும்புகிறோம்
(அவளை விட நீர் சூடாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன்)
அவளின் முகம் எப்போதும் மென்மையாகவும் அதில் அமைதி உழன்றபடியும் இருக்கிறது
மற்றும் அவள் எப்போதும் என்னையே முதலில் குளிப்பாட்டுவாள்
என் விறைகளின் மீது சோப்பை பரத்தி
அவற்றை உயர்த்தியபடி அழுத்தி
பின் எனது ஆணுறுப்பை கழுவுவாள்;
"இதன் விறைப்பு இன்னும் குறையவில்லை!"
என்று வியந்தபடி அதை சுற்றி இருக்கும் மயிர்களை வருடியவாறு
வயறு, முதுகு, கழுத்து, கால்கள் முழுதும்
தடவுகையில் நான் சிரித்து கொண்டே இருப்பேன்
சிரித்தபடி ரசித்து கொண்டே இருப்பேன்
பிறகு நான் அவளை குளிப்பாட்டுவேன்
மெல்ல அவள் பெண்ணுறுப்பைத் தொட்டு தொடங்கி
அவளின் பின்னால் நின்றவாறு என் உறுப்பு
அவளின் புட்டத்தை உரசியவாறு நின்றபடி
அவளின் பெண்ணுறுப்பை சுற்றியிருக்கும் முடிகளில்
மென்மையாக சோப்பை பரத்துவேன்
தேவையானதை விடவும் அதிகமாக முனகியபடி அங்கிருந்து
பிறகு கால்களின் பின்புறம், புட்டம்
முதுகு, கழுத்து என்று தொடர்கையில் அவளை திருப்பி முத்தமிட்டபடி
அவளின் மார்பகங்கள், வயற்று பகுதி, கழுத்து போன்ற இடங்களில்
சோப்பிட்டபடி கீழறங்கி
கால்கள், குதிகால், பாதம் ஆகிய இடங்களிலும் சோப்பிட்டு முடித்து
மீண்டும் அவளின் பிறப்புறுப்பை சீண்டியபடி
என் அதிர்ஷ்டத்தை செப்பனிட்டு மற்றுமொரு முத்தமிட்டேன்
எப்போதும் அவள்தான் முதலில் வெளியேறுவாள்
துவட்டியபடியும் முடிகளை உலர்த்தியபடியும் பாடி கொண்டிருப்பாள்
அப்போது நான் இன்னும் சூடான நீருக்குள்
புதைந்தபடி எங்கள் காதல் புணர்வின் நற் தருணங்களை
அசைபோட்டபடி குளித்து முடித்து
பின்பு வெளியேறுவேன்
அப்போது அது அன்றைய அமைதி சூழ்ந்த நடு-மதிய நேரமாகி இருக்கும்
உடைகளை அணிந்தவாறு அன்றைய மற்ற
அலுவல்களை பற்றிய உரையாடல் தொடங்கும்
ஆனால் இப்படி நாங்கள் இருவரும் காதலால் ஒன்றாக இருப்பது
மற்ற அலுவல்களை விடவும் முக்கியமானதாகவும்
இப்படி இருப்பது மற்ற அலுவல்களை பற்றிய கவலைகளை முடித்தும் விடும்
என்பது தொன்றுதொட்ட ஆண்-பெண் சரித்திரத்தின் மூலம் அறியப்பட்டதே
எனும் போதும், அந்த சரித்திரம் எப்போதும் தனிப்பட்டு
ஆணுக்கும் பெண்ணுக்குமென பிரிந்ததாகவும் இருக்கிறது-
என்னை பொறுத்த வரை நினைவுகளில்
உழலும் வலியும், தோல்வியும், துக்கமும் அற்புதமானவை;
அவற்றை பிடுங்க நினைத்தால் மெதுவாக, மிருதுவாக செய்யவும்
நான் வாழும்போது சாவதை போன்று இல்லாமல்
நான் உறங்கும்போது சாவதை போன்று
ஆமென்!