வீழ் - குமரகுரு

green. by moronaromadesign

சிறகு தொலைத்த பறவை
காட்டை நோக்கி செல்ல செல்ல 
விரியும் காடு விரிய விரிய 
குழல் தேடி வந்த இசை
தொலைத்த துளைகளின்
நடுவே முளைத்திருக்கும்
புல் காற்றில் நடனமிடுகிறது!

துப்பாக்கியினுள் தயாராக வரிசையில் 
நிற்கும் தோட்டாக்களை எடுத்து
மகளுக்கு தோடாக்கி விட
நினைக்கும் மனம் கொண்டவன்
சுடுகிறான் தன் எதிரியில்லாதவனை

கிணற்றுக்குள் எட்டி பார்க்கையில்
முகத்தை சுற்றி மிதக்கும் நீருக்குள்
சில இன்னொரு கிணறு
பிறந்து மூழ்குகிறது

எக்கி எக்கி பார்க்கும்
பச்சோந்தியின் வால் கிளையை
இறுக்கிப் பிடித்திருப்பது
வீழாமல்இருப்பதற்கல்ல