கல்யாண்ஜியின் பார்வையில் எல்லாம் கவிதையே – சாயாசுந்தரம்

Image result for கல்யாண்ஜி

நிலவு பார்த்து ஏதாவது சொல் என்றால்…என்ன சொல்வது?
ஆயிரம் ஆயிரம் பேருக்கு பாடுபொருளானாது மட்டும் அல்ல
இன்னும் ஆயிரம் ஆயிரம் பேருக்கு பாடுபொருளாக பாடப்படக் கூடிய சிறப்பு தரக் கூடிய ஆத்மார்த்தம் அல்லவா அது…..

ஒரு நிகழ்ச்சியை….ஒரு காட்சியை….தான் காணும் விதத்திலெயே மற்றவர்களையும் காணச் செய்தல் என்பது சற்றே கடினமான ஒன்றுதான்.
ஒரு நதியோ, ஒரு மலையோ , ஒரு மரமோ அது அதுவாகத்தான் இருக்கும்…ஆனால் பார்வைகள் வெவ்வேறு,,,சிலருக்கு நதி நதியாக மட்டுமே தெரியும்,நீர் ஒடுகிறது..அவ்வளவு தான் விசயம்.
ஒரு மரம் அதன் உச்சியில் சில காய்கள் பறிக்கப் படாமல் உள்ளன
உபயோகம் அற்றவையாகப் போயின அவ்வளவு தான்…

ஆனால் கவிஞனின் பார்வைக்கு எல்லாம் கவிதையே..
எதுகை மோனை என எந்தத் தமிழ் சித்து விளையாட்டும் கிடையாது,
எளிமையாய் தான் பார்த்த ஒன்றை நமக்கும் தோள் தொட்டு காற்றுவாக்கில் சொல்லிச் செல்வதில் கல்யாண்ஜி வல்லவர்.

‘’கை தவறிக் கீழே விழுந்த
கடலை எல்லாம் சாமிக்கு.
துறட்டிக்கு எட்டாமல்
தூரப்போன
முற்றல் முருங்கைக் காயெல்லாம்
கிளிகளுக்கு.
கறவைகளுக்குச் சுருக்காமல்
காம்பில் எக்கின
பால் எல்லாம் கன்றுக்கு.
திருவினை ஆகாத
முயற்சித் திராட்சை எல்லாம்
பந்தலுக்கு.
எட்டுவது....கிட்டுவது
எல்லாம் எனக்கு.
முடியாதது....படியாதது
முழுவதும்...
உனக்கே உனக்கு. ‘’எனச் சொல்லி மறுமுறையும் நம்மை திரும்பிப் பார்க்கவைத்து, ஆமால எனச் சிலாகிக்க வைப்பவர்.

எப்போதும் மனித மனம் வித்தியாசப்பட்டது தான்.ஆகக் கூடிய எதையும் தவிர்த்து விட்டு,முடிந்த ஒன்றுக்காக துக்கப்பட்டு நடிப்பது சாதரணமாகிப் போனது நிஜம்.
’’தண்ணீர்த் தொட்டிக்குள்
 செத்துக் கிடந்த காக்கைக் குஞ்சுகளுக்கு
மனதார வருத்தப் பட்டாயிற்று
வாசலில் நிற்கும்
வயசாளிக்கு .....
"ஒன்றுமில்லை" என்று
அனுப்பிவிடலாம்.
இன்றைக்கு .....
என்னால் முடிந்தது இவ்வளவே.’’ என அன்றாட நிகழ்ச்சியை வலிக்கச் சொல்லக் கூடியவர்.

’’கூண்டுக் கிளியைச் சுட்டிக் காட்டி பேசும் பேசும் எனச் சொல்பவனிடம்
பறவை என்றால் பறக்கும் என்ற பாடத்தை முதலில் நீ படி ’’ என்ற பாடம் எல்லாருக்கும் தேவைதானே…
வாழ்க்கை என்பது எப்போதும் வண்ணப் பூக்கள் சுமந்து நிற்கும் பூந்தோட்டம் மட்டுமல்ல,முற்களும் ,கூரிய கற்களும் நிறைந்தது தானே,
ஏன் வாழவேண்டும் என்பதாக தோண்றச் செய்யலாம் சில நேரம்,சட்டென எளிமைப் படுத்தி தத்துவார்த்தமாக இல்லை ஒரு தட்டு தட்டி சொல்லிச் செல்வார் ‘’ இருந்து ....
என்ன ஆகப் போகிறது ?
செத்துத் தொலையலாம்.
செத்து....என்ன ஆகப் போகிறது?
இருந்தே தொலையலாம்….என.

கவிதை  சாகரம்…..அலை அள்ளி வந்த நுரை போலும் , நான் சுவைத்தவை அந்த நுரைகளின் கோடானகோடி குமிழ்களில் ஒரு துளி….நிறையப் பார்க்கவும்,படிக்கவும் ஆசை எப்போதும் ரசிக்கலாம் சமுத்திரத்தை,துள்ளி விளையாடும் கடற்கரை நினைவாக சில….

சிலரின் சந்தோசவார்த்தைகள் தரும் இதம்
சிறுகண்ணீர்த் துடைக்கும் சில கரங்கள்
இறுக்கத்தின் மௌனத்தைக் கிழித்துப்போடும்
யாரோ ஒருவரின் புன்னகை
நிலவற்ற வானத்தில் மின்னிப்போகும்
ஒற்றை நட்சத்திரம்
அப்பாவின் அடிச்சுவட்டை
எட்டி எட்டிப் பிடித்து
நடக்கும் கடற்கரை நடை
அம்மாவின் புடவை வாசம்
முதல் அறிமுகத்தின் தோழமை
பாசம் செலுத்தும் யார்யாரோ
பகிர்ந்தளிக்கின்றனர் நேசத்தை
ஒவ்வொரு சிறகும்
ஒவ்வொரு வர்ணம்
இறகு விரித்துப் பறக்கிறேன்
எல்லாமுமே எனக்கான வானம் தான்...இப்படியாகத் தான் உணர முடிகிறது ’’கல்யாண்ஜி’’யின் கவிதைகளையும்..