கண்கள் வரைவது - மயிலன்

the spectator by XtearXdropX

என் அந்த
ஓவியத்தில்
கண்கள் வரையப்படவில்லை என்று
எல்லோரும் குறைப்பட்டுக்கொண்டார்கள்

கண்கள் வரையத்தெரியவில்லை
என்றில்லை
அப்படியே
அச்சசலாய்
வரைந்துவிடுவேன்
அதுதான் பிரெச்சனை