மேதை - லியோனார்ட் கோஹேன் (தமிழில் பாலகிருஷ்ணன் ராமசாமி)

நான் உனக்கு
ஒரு ஒதுக்குபுறப்பகுதி யூதன்
எனது திருகலான முட்டிகளில்
வெண் காலுறை அணிந்து
நடனமாடுபவன்
அணைத்து நகரக் கேணிகளிலும்
நஞ்சு கலப்பவன்

நான் உனக்கு
ஒரு துரோகம் செய்யக் கூடிய யூதன்
டல்மடின் அடிப்படையில்
குழந்தையின் எலும்புகள்
எங்கு மறைத்து வைக்கப் பட்டுளவோ அங்கு
ஸ்பானியப் பாதிரியிடம் உறுதி
எடுத்துக் கொள்பவன்

நான் உனக்கு
ஒரு வங்கி அதிகாரியான யூதன்
ஒரு பழம் கம்பீர வேட்டைக்கார அரசனைத்
திவாலாக்கி அழித்தவன்

நான் உனக்கு
ஒரு பிராட்வே யூதன் எனது அன்னைக்காகத்
திரை அரங்குகளில் கதறுபவன்
பேரம் பேசிய சரக்குகளை
கவுண்டருக்குக் கீழ் விற்பவன்

நான் உனக்கு
டாக்டர் யூதன் மீண்டும் தையலிட
குப்பை டப்பாக்கள் அனைத்திலும்
ஆண்குறி நுனித் தோலைத் தேடுபவன்

நான் உனக்கு
ஒரு டச்சாவு யூதன்
பசைக் கட்டால் முட்டி இறுகக் கிடந்து
எம் மனமும் அறியவொண்ணா
வீங்கிக் கிடக்கும் வலியில் கதறுபவன்

குறிப்புகள்:


டல்மட்- யூதர்களின் வரைவு நூல்

டச்சாவு - ஒரு நாசி வதை முகாம்