காயத்ரி கவிதைகள் (4) - நட.சிவகுமார்
வீட்டிலுள்ள

டீவிப் பெட்டியில்

நிலா தெரிந்ததும்

அம்மா ஆவென வாயை பிளக்கின்றது

கிளிப்பிள்ளை

 ---------------------------------------------------------------------------------------------------------

காயத்திருமெனி எண்னெய் எடுத்து

கால் தடவி விடுகின்றாள்

சில நேரம்

எண்ணெய் எடுத்து

தன் பிஞ்சு கால்களில்

தடவச் சொல்லுகிறாள்