கவிதைத் தருணம் - சண்முக சுந்தரம்
அவன் தன் நித்தைய ரயில் பயணத்தில்
ஓரு கவிதைத் தருணத்திற்காக காத்திருக்கிறான

எல்லா இரயில்களையும் வழி அனுப்பி
எந்த பயணமும் இயலா நடை மேடைகள்
அவனைக் கடந்து  மறைந்து போயின

மாநகரின் கான்கீரிட் பசிக்கு எஞ்சி
மிஞ்சிய ஏரியின் சொச்சமும் கடந்து போனது


கணிணி கம்பெனிகளின் கண்ணாடி பளபளப்பிற்கு பிந்தைய சந்தின்
திறந்த வெளி கழிப்பறைகளூம் கடந்து
சென்றன


மகனிடம் அலை பேசியில் கோபம் உரைக்கும் முதியவரும்
லேப்டாப் பையுடன் பஞ்சகச்ச குடுமி சாஸ்திரிகளும்
இந்நாள் காதலின் அலைபேசி அழைப்பு தவிரத்து, பின் நாள் காதலின் குறுந்தகவலுக்கு காத்திருக்கும் யுவனும்
ஈரடுக்கு டிபன் ஆங்கில குறுக்கெழத்து சகிதம் அரசு அலுவலும்
அவனது சக பயணிகள்

அவன் தன் நித்தைய ரயில் பயணத்தில்
ஓரு கவிதைத் தருணத்திற்காக
இன்னும்
காத்திருக்கிறான