மிச்சம் - கவிதா ரவீந்தரன்





சந்தர்பங்களின் சாத்தியத்திற்கு

உதவக்கூடுமென

சேருமிடத்தை மாற்றியவாறு

கணத்துக்கொண்டே போனது

ஓர் பயணம்

எங்கும் இறங்க மனமின்றி

இருப்பின் தடயங்கள் ,

இழந்த இரவுகளை எண்ணிக்கொண்டு

கிளம்பும் போதெல்லாம்

நினைவுகளை சுமந்து போகிற

ஏதேனுமொரு திசையில்

குறுக்கிடும் காகத்திற்கு

தெரியாது

எதிர்பார்புகளின் குவியலோடு

அலையும் வாழ்வு பற்றி . . .