கவிஞர் பாண்டூ சிறு குறிப்பு
பாண்டூவின் இயற்பெயர் இரா.இரமேஷ் பாண்டி. சிவகாசியை சேர்ந்தவர். இவரது படைப்புகள் “நெருப்பாற்று நீச்சல் – கந்தகப்பூக்கள்” (2009),.நவீன தமிழ் இலக்கியம் சில பார்வைகள்,.படைப்பு அகமும் புறமும் – கந்தகப்பூக்கள் (2013) மற்றும் செந்தமிழ் ஆய்வுக்கோவை
ஆகிய நூல்களில் வெளியாகி உள்ளன. இவரது கவிதைத் தொகுப்பு “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் (2013).

விருதுகள், பரிசுகள்:
 1. 23 ஜூலை 2006 மெல்லத் தமிழினி வாழும்” கவிதை கருங்குழி - திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறையால் பாராட்டுப் பத்திரம் பெற்றது
 2. 27 அக்டோபர் 2013 – ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் ‘துளி’ திங்களிதழ் ‘கந்தகக்கவி’ என்ற பட்டம் வழங்கியது.
 3. 23 டிசம்பர் 2013 – கவிஞர் சுராவின் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘கவிச்செம்மல்’ என்ற பட்டமும், ரூ.1000/- ரொக்கப் பரிசும் தந்து கொளரவித்தது.
 4. 5 ஜனவரி 2014 – சென்னை மருத்துவ அறிவியல் கழகத்தால், 23 ஆவது மருத்துவ மாநாட்டில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டு, தியாகி டி.எம்.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பொற்கிழி விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது
தற்போதைய பொறுப்பு :

1.         கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு உறுப்பினர்
2.    கந்தகப்பூக்கள் இதழ் ஆசிரியர் குழு
3.         தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
விருதுநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும்
சிவகாசி கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்.

படைப்புகளை வெளியிட்டுள்ள இணையதளங்கள் :

www.vaarppu.com
www.orukavithai.com
www.thozharjeeva.blogspot.in
www.neelanilaa.blogspot.in

கவிதைகளை வெளியிட்டுள்ள இதழ்கள் :
 1. கந்தகப்பூக்கள்
 2. தினமலர் வாரமலர்
 3. என்லைட்டர்
 4. நீலநிலா
 5. ஏழைதாசன்
 6. வணக்கம் சிவகாசி
 7. பயணம்
 8. எஸ்.பி.பி. போஸ்ட்
 9. வளரி
 10. கதவு
 11. இன்று மலர்
 12. உண்மை
 13. ஜனசக்தி
 14. ஆரத்தி
 15. தாமரை
 16. உங்கள் நூலகம்


பங்கேற்றுள்ள ஊடகங்கள் :

கோடைப்பண்பலை வானொலி நிலையம்
டிடி பொதிகையில் :
 1. ‘இலக்கிய ஏடு’ பகுதியில் நூல் விமர்சனம்
 2. கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்வில் சிறப்பு விருந்தினர்.