35 சதவிதத்தில் ஒர் இடம் - ஷான்




காலியான உணவகம்
கைகள் மட்டும்  
உணவில்
காதுகளும் 
 கவனமும் 
பக்கத்து மேசையில்

"இந்த வியாதி 
 யாருக்கும் வேண்டாம்
என் மகனை  
பார்க்கையில்
பாரமாக இருக்கிறது."

"என் மகனும் 
  இப்படித்தான் இருந்தான்
இப்ப பரவாயில்லை..
உங்க மகனும்  
குணமாயிடுவான்..
இந்த வியாதி 
 வந்தவங்களில்
35 சதவிதம் 
 பிழைச்சுபாங்க".