பேச்சுக்கு பின் - பா. வேல் முருகன்





உன்னோடு அடிக்கடி 
அளவளாவ 
அதிகம் கற்றுக்கொண்டு 
தாயார்படுத்திகொண்டிருந்தேன்
என்னை நான் 
அறிவாளியாக காட்டிக்கொள்ள...

உன்னிடம் 
இலக்கியம் பேசினேன் 
அமைதியாக இருந்தாய்.. 

உன்னிடம் 
அரசியல் பேசினேன்
அமைதியாக இருந்தாய்... 

உன்னிடம் 
காதல் பேசினேன் 
அமைதியாக இருந்தாய்...   

உன்னிடம் 
காமம் பேசினேன்
அமைதியாக இருந்தாய்...

உன்னிடம் 
வரலாறு, வணிகம், 
வியாபாரம்,விபச்சாரம் 
குழந்தை வளர்ப்பு, கொள்கை இருப்பு 
என எனக்கு தெரிந்ததையும்
கற்றுக்கொண்டு தெரியாததையும் 
பேசிக்கொண்டே இருந்தேன் 
நீ அமைதியாகவே இருந்தாய்...

என்ன பேசினாலும் 
நீ பேசப்போவதில்லை 
என்று முடிவு செய்து 
நான் அமைதியானேன்  

நீ பேசத்தொடங்கினாய்.