பூச்சிப்பிடிப்பதான காரியம்
சுயநலத்தோடே என்று
சத்தியம் செய்வது
அவள் பிசைந்தூட்டுவதில்
பங்கு கேட்பதில்லை
அது அவளுடையாகவே
என்றென்றைக்கும் இருப்பதால்
அப்போது மட்டும்தான்
பார்க்க முடிகிறது
கரும்பாளங்களின் மூலம்
நெருப்பானது அவளோடு
கொண்ட காதலின்
ஆழத்தை
என் புத்தகப்பையில்
சூளையின் வெப்பத்தால்
இறுகிய செம்மண்தடயம்
காணாமலாக நாட்களாகும்.
----------------------------------------
சுயநலத்தோடே என்று
சத்தியம் செய்வது
அவள் பிசைந்தூட்டுவதில்
பங்கு கேட்பதில்லை
அது அவளுடையாகவே
என்றென்றைக்கும் இருப்பதால்
அப்போது மட்டும்தான்
பார்க்க முடிகிறது
கரும்பாளங்களின் மூலம்
நெருப்பானது அவளோடு
கொண்ட காதலின்
ஆழத்தை
என் புத்தகப்பையில்
சூளையின் வெப்பத்தால்
இறுகிய செம்மண்தடயம்
காணாமலாக நாட்களாகும்.
----------------------------------------
என்னவளின்
முடிவுறாப்பயணம்.
ஒற்றைப்புள்ளியில் தொடங்கிய
எங்களிருவரின் பயணம்
அரைவட்டத்தின் முடிவில்
சந்திக்கையில் மறுமுறை
தொடக்கிற்று அவளுக்குமட்டும்
தாயின் கருப்பையில்
இருந்தபொழுது பிரசவத்தின்
அவதிகளை சொல்லி
இரட்டை உயிரையும்
அலைவுறச்செய்த
பொக்கைவாய்ச்சிகளிடம் இருந்து
இதற்குமேல்வரும் இரவுகளில்
அவளை காப்பதாக நான்
வாக்களித்திருந்தேன்
பின்தொடர்ந்து
பல்லிளித்தவர்களை
கொட்டுவைத்து
அவள் பாதங்களில்
வீழச்செய்தபோது
என்னை வகைப்படுத்தியிருப்பாள்
சுமந்தே திரியமறுக்கையில்
சுயபச்சாதாபம் கொள்ளாமல்
அசரடித்தவள் அவள்
அந்த ஒற்றைப்புள்ளிப்பயணம்
தொடங்கியது என்
காளைப்பருவத்தின் ஆரம்பத்தில்
அவளது பருவங்கள் எதுவாயினும்
எனக்கானதே என்பதால்
நான் அமுக்கியேவைத்திருந்தேன்
பயணத்திலும் என்னை
விட்டுவிடாமல் தலைதிருப்பி
பார்த்தே வருகையில்
அவள் பின்னோக்கிச்சென்றது
அவளறியாமல் நிகழ்ந்தது
இதோ
குழவியாய் என்
கைகளில் தவழ்கிறாள்.
எங்களிருவரின் பயணம்
அரைவட்டத்தின் முடிவில்
சந்திக்கையில் மறுமுறை
தொடக்கிற்று அவளுக்குமட்டும்
தாயின் கருப்பையில்
இருந்தபொழுது பிரசவத்தின்
அவதிகளை சொல்லி
இரட்டை உயிரையும்
அலைவுறச்செய்த
பொக்கைவாய்ச்சிகளிடம் இருந்து
இதற்குமேல்வரும் இரவுகளில்
அவளை காப்பதாக நான்
வாக்களித்திருந்தேன்
பின்தொடர்ந்து
பல்லிளித்தவர்களை
கொட்டுவைத்து
அவள் பாதங்களில்
வீழச்செய்தபோது
என்னை வகைப்படுத்தியிருப்பாள்
சுமந்தே திரியமறுக்கையில்
சுயபச்சாதாபம் கொள்ளாமல்
அசரடித்தவள் அவள்
அந்த ஒற்றைப்புள்ளிப்பயணம்
தொடங்கியது என்
காளைப்பருவத்தின் ஆரம்பத்தில்
அவளது பருவங்கள் எதுவாயினும்
எனக்கானதே என்பதால்
நான் அமுக்கியேவைத்திருந்தேன்
பயணத்திலும் என்னை
விட்டுவிடாமல் தலைதிருப்பி
பார்த்தே வருகையில்
அவள் பின்னோக்கிச்சென்றது
அவளறியாமல் நிகழ்ந்தது
இதோ
குழவியாய் என்
கைகளில் தவழ்கிறாள்.