உன்
பாதி
முகத்துடன்
எனை
திரும்பி
பார்க்கும்
பொழுதுகளில்;
இன்னும்
ஒருமுறைகூட
தவறியதில்லை
நான்;
உன்
ஒருபாதி
புன்னகைகளை
சேகரிப்பதை...
தவறான
கோணங்களில்
எடுக்கப்பட்ட
புகைப்படங்களின்
ஒளிச்சிதறல்
யாவும்
உன்
விழி
உமிழ்ந்த
காதலின்
மிச்சம்...
நீ
பேசாத
மௌனங்களை
என்னவாயிருக்குமென
எண்ணுகிறேன்;
ஏதோ
ஒரு
பக்கமாக
நீ
திரும்பி
அமர்ந்திருக்கும்
ஒரு
ஒளிப்படத்தில்...