நேற்று இரவு எனக்கு உறக்கமில்லை
அண்டெர்வெர் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததில்
சூட்சமத்தில் அண்டெர்வெர் பற்றி
நினைப்பதை நீ எவ்வாறு நிறுத்த இயலும
ஆழ்ந்து நீ செல்லும் வேளை
சில அதிர்ச்சிகள் உனக்கு கிட்டும்
அண்டெர்வெர் பற்றி நாமனைவரும் சிந்தித்தாக வேண்டும்
எல்லோரும் ஒவ்வொரு அண்டெர்வெர் அணிகின்றனர்
க்யுபாவினர் இந்தியர்கள்
போப் கூட அணிகிறார் என்று நினைக்கிறேன்
டி வி யில் பார்த்ததில் லூசியானா கவர்னர் அணிகிறார்
எனப் புரிந்து கொண்டேன்
அவரது அன்டர்வேர் இறுக்கமாக இருந்தது என நினைக்கிறேன்
அடிக்கடி அவர் செருமுகிறார்
அன்டர்வேர் உன் உறவை வளர்க்கும்
ஆண் பெண் அன்டர்வேர் விளம்பரங்களை நீ கண்டிருக்கலாம்
ஒன்று போல எனினும் வேறுபட்டதாக
பெண்களின் அன்டர்வேர் பொருட்களை உயர்த்தியும்
ஆண்களின் அன்டர்வேர் பொருட்களை தொங்க விட்டும்
ஆண் பெண் இருவருக்கும் இது பொதுவாக
அன்டர்வேர் ஒன்றுதான் நமக்கிடையில் மெய்யாக
மூவண்ணம் ஒன்றாக முக்கோண வடிவாக
அதிக பலமான பகுதியைக் காண்பிப்பதாக
முழு சுதந்திரம் கிட்டுமென
ஏமாந்து விடாதே இது ஒரு இரு கட்சி அமைப்பு
இதில் ஏது முழு சுதந்திரம்
இப்போதுள்ள அமைப்பில்
அமெரிக்கா தன அன்டேர்வேரில்
இரவில் போராடுகின்றது
அன்டர்வேர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது
அடிப்படை ஆடைகளை எடுத்துக் கொள்
தலைமறைவு அரசுகளின் பாசிச வடிவங்கள் அவை
மக்களை உண்மை என நம்ப வைக்க முயலும்
எதனை நீ செய்ய வேண்டும் வேண்டா மென
நீ ஒரு அரையாடை அணிந்ததுண்டா ?
அஹிம்சை ஒன்றே இதற்கு வழி
காந்தி ஒரு அரையாடை அணிந்ததுண்டா ?
லேடி மாக்பெத் ஒரு அரையாடை அணிந்ததுண்டா ?
மாக்பெத் இதனாலா உறங்குபவனை கொன்றான?
அவளுக்கு அரிப்பு நேர்ந்த இடம் தான்
அவள் உள்ளாடையா
நவீன ஆங்கிலோ சாக்ஸன் பெண்மணிகள்
குற்றவுணர்ச்சி மிகுந்தவர்கள்
கறை படிந்த இடத்தை அவர்கள்
தோய்கின்றனர் தோய்கின்றனர்
கறையுள்ள அன்டர்வேர் ஐயமேற்படுத்துவது
வீக்கமுள்ள அன்டர்வேர் அதிர்ச்சியூட்டூவது
பட்டிகள் உள்ள அன்டர்வேர் சுதந்திரத்தை உணர்த்துவது
ஒருவன் தனது அன்டர்வேரை விட்டு விலகினால்
அவன் எங்காவது நிர்வாணமடைந்திருப்பான்
உதவி
கவலை கொள்ளாதே
எல்லோரும் அதில் தான் நிலை உள்ளவர்
அப்போது புரட்சிக்கான வைப்பு இல்லை
கவிதை ஆன்மாவின் அன்டர்வேர்
தவறுகளின் ஒரு தொகுப்பு
நிலவியல் அடிப்படையில்
அதிசய படிவப் பாறைகள் விளங்காத விரிசல்கள்
நான் நீயாக இருந்தால் குளிர்கால பெரிய வடிவ
அன்டர்வேர் அணிவதை தவிர்ப்பேன்.
அவ்விரவில் நீ நிர்வாணமாய் நடந்து செல்லாதே
வெம்மையாக மௌனமாக இருந்திடு
ஒன்றுமில்லாத ஒன்றுக்கு
நாம் ஏன் பெரிதாக எதிர்வினையாட வேண்டும்
கம்பீரமாக முன் செல்
உள்ளாடையை உன் கரம் பற்றி
உணர்ச்சி வசப்படாதவரை
மரணம் தன் அரசினை இழந்திருக்கும்
அன்பே நமக்கு நேரம் மிக உள்ளது
நாம் இளமையுடையவர் எனவே
அமைதி அமைதி கூச்சல் வேண்டாம்