தொடர்ந்து நான் மரணமேய்துகிறேன்
நரம்புகள் தளர்ந்து வீழ்கின்றன
உறங்கும் குழந்தையின்
சிறு முட்டி மெல்ல விரிதல் போல
பழம் கல்லறையின் நினைவுகள்
அழுகும் சதை புழுக்கள் இடும்
சவால்கள் எதனையும் நான் ஏற்க இயலாது
ஆண்டுகளின் கொடிய தோல்விகள்
ஆழ புதைந்து வாழ்கின்றன
முகத்தில் ஓடும் வரிகளில்
எனது விழிகளை அவை மங்கச் செய்யும்
எனினும் நான் தொடர்ந்து இறப்பேன்
ஏனெனில் நான் வாழ விரும்புகிறேன்