தண்ணீரைக் கிழித்துக்கொண்டு
எனது மனக்குதிரை
ஆரவாரத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது
இக்கரையில் மூழ்கி அக்கரை செல்ல
ஆர்ப்பாட்டத்தில் குதிரை எனது
மனக்குதிரையை
எந்த தண்ணீர் விழுங்கிச் சென்றதோ.
பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்
கவிதை தொகுப்பில் ஒளிரும்
என்.டி.ராஜ்குமார் கவிதை
தூண்டி விட்டதும் சட்டென
மாயச் சிறகையடித்து
கட்டுக்கடங்கா வேகத்தில்
மேகங்களுக்குள் ஊடுருவி
விரித்தச் சிறகோடு வட்டமடித்து
வானவில்லில் ஏறிக் குதித்து
மலை முகடுகளைத் தாண்டி
அதீதப் பறவையாய்
பாரா முகமின்றி எங்கெங்கோ
சாதூர்யமாய் பறந்து திரிகின்றேன்
கண் விழித்ததும்
தொப்பென
தரையில் கிடக்கின்றேன்.
இவ்வாறாய்
என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள்
மனம் முழுக்க பல்வேறு கவிதைகளை
புதிது புதிதாய் விதைத்துச் செல்கிறது
காதலை சுமந்துகொண்டு..