முகச்சவரம் செய்யுமிடம் - - நாகபிரகாஷ்


காத்திருக்கும் பாடங்கள்
கிடைக்காத வேலை
தோற்ற சில காதல்கள்
அம்மாவின் மரணம்
அப்பாவின் உடல்நிலை
எதிர்நோக்கும் அவமானம்
பணமுடை மனமுடை

அளவுகோல்கள்
ஏறக்குறையவென்று
முகமூடியணிந்து

முனுசாமியண்ணன்
துல்லியமாய்ச்சொல்வார்,
'
அவன் கன்னத்தில் கத்திபட்டு பத்துநாளாச்சு'