வசியம் செய்துவிட்டாய் - குமரகுரு

வசியம் செய்துவிட்டாய்
குளம்பி வாச புகையாக
வசியம் செய்துவிட்டாய்
வறுக்கப்பட்ட மீனாக
வசியம் செய்துவிட்டாய்
கொழுகொழு குழந்தையாக
வசியம் செய்துவிட்டாய்
இலுப்பிய கண் மையாக
வசியம் செய்துவிட்டாய்
மகுடியின் இசையாக
வசியம் செய்துவிட்டாய்
பசியம் நடு மஞ்சள் பூவாக
வசியம் செய்துவிட்டாய்
எங்கேயோ கூவும் குயிலாக
வசியம் செய்துவிட்டாய்
கிணற்று நீர் பிம்பமாக
வசியம் செய்துவிட்டாய்
நனைதல் பின் குளிராக
வசியம் செய்துவிட்டாய்
கண்ணாமூச்சி துணியாக
வசியம் செய்துவிட்டாய்
அன்பில் பூத்த புன்னகையாக
வசியம் செய்துவிட்டாய்
விடுதலை வேட்கையாக
வசியம் செய்துவிட்டாய்
உடைந்த பனிக்குடம்
இழந்த உயிர் தேடி
அலையும் என்னை
வதைத்து எழுத வைத்து
வசியம் செய்துவிட்டாய்
நீ!