ஒட்டுபொட்டு - வேல்முருகன்.பாஒரு பொட்டினை 
அந்த நெற்றியிலிருந்து 
இந்த நெற்றிக்கு ஒட்ட 
எத்தனித்துக் கொண்டிருந்தாள்

நெற்றியைக் கொடுத்துவிட்டு
நித்தப்பணிகளில் 
நீந்திக்கொண்டிருந்தேன்

நடுநெற்றியில் ஒட்டவைக்க 
நன்றாகப் பிரயத்தனம் செய்தும் 
நழுவிக்கொண்டிருந்தது 
ஒட்டுப்பொட்டு 

இரேண்டொருமுறை 
கீழேவிழுந்தும் 
ஏழெட்டு முறை 
இடுக்குகளில் சிக்கியும் 
கிடைத்திருந்தது 
அவளுக்கு அது

கோந்து காயினும்
கொண்டகாரியம் காயாது 
எச்சில் தொட்டு 
ஒட்டியிருந்தாள் 
முடிவில் அதை 

பொட்டு ஓட்டியதும் 
பொண்ணாகியிருந்தேன்  நான் 
எனக்குதெரியாது 
அவளுக்குமட்டும்.