அசந்தர்ப்பவாதி - பா.சரவணன்
உருட்டப்பட்ட தாயக்கட்டை போல்
அல்லது
சுற்றிவிடப்பட்ட ரிவால்வர் போல்

நண்பர்கள்
குடும்பத்தினர்
சூழ்ந்து நிற்கும் மேசையின் நடுவில்
அவதாரம் எடுத்து அலைந்துகொண்டிருக்கிறது
ஒரு தற்கொலைக் கணம்

நான்
அந்த ரிவால்வரைக் கையில் எடுக்கிறேன்.