காத்திருக்கும் நாகம் - நாகபிரகாஷ்





ஒரு குற்றவாளியாக்கவேண்டாம் மனதை
அது அடங்காத தருணங்களுண்டுதான்
காணாமற்போகவும் செய்யக்கூடும்
இல்லையெனில் கழன்று
நம்மை தடுக்கிவிழவைக்கும், இல்லாமலாக்கும்
சித்தனாகவோ  ஒருபரதேசியாக அலைவதாலோ
அது வேறொன்றாகப் போவதில்லை
ஆனதானால், நீர் பனிக்கட்டியாவது போல
தீ காட்டமானால் உருகிவழியும்
காவலாளியிடம் சரண் புகுவோம்
அதொரு பெரும் நாகம்
விழுங்குவதாக பிணைந்திருக்கிறது
அதனுடல் கொதித்தாலும்
அதன் கண்கள் பாருங்கள்
உள்ளிருக்கும் தேடலை
மின்னலுண்ட கருவிழிகள்
அரையளவு இமைமூடியது
வெறும் தியானத்தில் இருக்கிறது
தடைகளைமிறியதை தடவிக்கொடுங்கள்
விரல்சுடுவதன் கவலைவேண்டாம்
ஒரு இசைபோல ஓவியம்போல உண்மைப்பிரதிபோல
அது செலுத்தும் அன்பு
காதலனைமட்டும் கீறாத பூனைபோல
தகுதிபெற அன்பு செய்வோம்.