ஸ்கிரீன் ஷாட்கள் - பா.சரவணன்
படிக்கட்டில் கொடுக்கப்படும் முத்தம்போல்
மேக்கப் கிட்டில் இருக்கும் விஸ்கி போல்
பர்ஸில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் காண்டம் போல்
கடவுளிடம் கேட்கும் வரம் போல்
சாத்தானின் (உதட்டி)ல் இடப்படும் முத்தம் போல்
பேருந்தில் நடத்தும் உரசல் போல்
பெண் நடிகரின் மார்பை மேலிருந்து காட்டும்
அப்பாவிக் கேமரா கோணம் போல்


எத்தனை விதமாய் எடுக்கப்பட்டாலும்
பகிரப்படுவது மட்டும்
கள்ளக்காதலின் வீட்டு கதவைத் தட்டும் சத்தம் போல்