எறும்புகளும் வன்மமும் - பிரசாந்த்பிறிதொரு இரவின்
வெண்ணிலா மறைக்கும் கழிவறையின்
சுவர்கள் மட்டுமே
அறியுமென்
வெறிக்கும் கண்களில் தென்பட்டது
தடித்த எறும்பொன்று

சுவர் மறைத்து
தலைதிருப்பி
சிரித்து கொண்டே சென்றது

முந்தய பொழுதின்
மஞ்சற் பின்னிரவில் உலா வருவதாய்
திலீபன் கூறிய
பிளாஸ்டிக் ராட்சதன் மீதமர்ந்தோ

மயிற்கழுத்து நிற
போர்வையின் கீழ் உறங்குகையில் மட்டும்
விஜியின் கனவிற் தோன்றும்
பெயரிலா பெருமிருகத்தின் வால் கடித்தோ

சில மனிதர்களை
நசுக்கி பழிதீர்த்ததால் சிரித்து இருக்கலாம்...

இவையேதும் இல்லையெனில்
என் கண்கள்
மூடிய பொழுதுகளில் அச்சுவர் பட்டுத்
தெறிக்கும் இள
விந்தினையேனும் மிதித்து கொன்றிருக்கலாம்...