குறிக்கோள்கள் ஏதுமற்றிருப்பதே
குறிக்கோளென
அண்டவெளியில் மிதக்கின்றன
பாறைகள்...
சூரியனின் உக்கிர வெளிச்சத்தின் பாதையில்
தனது இருப்பிடம் அமைந்துவிட்டது குறித்து
அவைகளுக்கு
யாதொரு பிரஞ்ஞையும் இல்லை...
பேரண்டத்தின் பேரியற்பியலின்
பெயரிடப்படாத விதியொன்றின்
ஒற்றை பலனாய்
மிதந்தபடி இருக்கின்றன
பாறைகள்...
உக்கிர பெருவெளிச்சத்தின்
ஒரு துளியை தேக்க நேர்ந்த
துர்பாக்கியத்தின் பலனை
நட்சத்திரங்களென அழைக்கப்படுவதில்
அடைகின்றன பாறைகள்...