டயானா கோஸ்மா கவிதைகள் (மொழிபெயர்ப்பு நாகபிரகாஷ்)
 
ஓருலகின் நிசப்தத்தின் மதிப்பு 

அவன் காதுகளில்
நான்
காற்றோடு கைகொட்டி
கொண்டாடும்
ஒற்றை இறகின்
இசை

எல்லைக் கோடுகளின் கேள்வி 

இரண்டு ஆறுகள்
சங்கமிக்கின்றன
ஒரே கடலில்

நாம்

நம்பிக்கையின் சைகைமொழி கற்போம்
நம்மை கேலிசெய்யும் அலைகளின் நடுவே
நம் சொந்தக்குரலின் ஓசைகள் துரோகம் செய்கின்றன

உனது ஒரு அலைக்கென
எப்போதுமே மாறாமல்,
உன்னை கொஞ்சம் தவறாக புரிந்துகொள்கிறேன்
எனது பெரும் பகுதிக்காக அல்லது ஏனதொரு நீர்விழ்ச்சிக்கென்று
ஆகவே இதுதான் வாழ்வின் காரணம்
இல்லையெனில் பழமையானதொரு,

தீராத தாகமா? 
----

a world's worth of silence 
in his ears, I am
the music
of a single feather
high-fiving the wind.

a question of boundaries 
two rivers 
being tamed 
in the same sea, 

we 

learn the sign language of trust 
among waves that mock us 
and the sounds of our own voices 
betraying us 

as unseparate, always mistaking an inch of you 
for a centimeter of me or a waterfall of me 
for a ripple of you. 

so is this the reason of life 
or is this an archaic, never-quenched

thirst?
© Diana Cosma


அனுமதி பெற்ற மொழிபெயர்ப்பு (உரிமம் பதிவு செய்த படைப்பு © டயானா கோஸ்மா)