டயான கோஸ்மா - ஒரு அறிமுகம் - நாகபிரகாஷ்


கவிஞர் டயான கோஸ்மா ரொமானிய நாட்டை சேர்ந்தவர்.  உளவியலாளர், மொழியியல் ஆர்வமும் அதில் ஆராய்ச்சிகள் செய்துவரும் சமூகசேவகர் என பல்வேறு இயங்குதளங்களில் செயல்படுபவர்.

மொழிகளுக்கிடையான உறவுகளையும் அத்துடன் தொடர்புடைய உளவியல் பார்வைகளையும் ஆய்வுக்கு உட்படுத்திவரும் முக்கியமான இளம் ஆராய்ச்சியாளர். இவரது தற்போதைய ஆராய்ச்சி உருவகங்களின் மனதோடான தொடர்பை வரையறுப்பது. தொண்டு நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக செயல்படுகிறார்.

மொழிகளோடான உறவை அறியும் அத்தனை பேரையும் போல இலக்கியத்தோடு காதல் கொண்டுள்ள இவர், படிகங்களை சேகரித்து ஆராய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
பெரும்பாலும் இவரது கவிதைகள் முன்வைப்பது பலவிதமான பதில்கள் கொண்ட கேள்விகளை ஒரு மென்மையான மனதோடு. இயற்கைக்கு திரும்பும் வழக்கமான தேடலும், தத்துவ நாட்டமும் கொண்ட மனம். உருவகங்கள் பழகியவை மாறிமாறி, இடத்திற்கேற்ற உணர்வை தந்துவிடும் என்று தேர்ந்து அவற்றை அமைக்கிறார்.

"Between Rain and Tear" என்ற இவரது முதல் கவிதைத்தொகுப்பு அவரது தாய்மொழியில் 2003ல் வெளிவந்தது. ''நிகிடா ஸ்டானென்ஸ்கூ'' என்கிற பெயரில் நடக்கும் கவிதைத் திருவிழாவில் விருது பெற்றது. 'Junior Unuion' படைப்பாளிகள் அறிமுகத்தில் சிறப்பிக்கப்பட்டது. "Breath versus Ego" என்ற தொகுப்பு ரொமானியன் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பு.