உடலில் பாதி கரம் - ரா பாலகிருஷ்ணன்


கவிதையை விடச் சிறந்தது ஒரு மரம்
எப்போதும் வானுயர்ந்து நின்று
கடவுளுடன் மொழி பேசும்
வலிய தண்டு தாங்கிய
இம்மரத்தின்   ஆசையில் வியந்த
கிளைகள் வான் எங்கும் தடவி முயக்க
விளையும் செவ்வரிக் கனிகளை
ஏன் கோட்டான்கள் தாவிச் சிதைக்கின்றன ?
விழிகள் கிளை வழித் தண்டிரங்க
காணும் இடை வரித் திமிர்ந்த
புரளும் யோனி பிளவுண்டதில்லை
அதன் பேராசையை என்றுமறியாப்
பேதைமை கொண்ட என் கரங்கள்
முயக்கவியலா விசும்பில் என் உடல்