நவீன ஹைக்கூ (தமிழில் ஆர்.அபிலாஷ்)





வயதான குதிரைகள்
அவற்றின் கண்களில்
முடிவற்ற மழையின் நாட்கள்
Old horses
Days of endless rain
In their eyes
-    Ron C. Moss, Australia

ஜாடியில் அவள் அஸ்தி –
ஒருமுறை எங்கள் சிற்றறையின் அடுப்பெரித்தோம்
கவிதையின் பக்கங்களால்
-    எரிங் ப்ரீஸ்-பாஸ்டட், கனடா
Her ashes in a vase -
Once we lit our cabin stove
With drafts of poems
-    Erling Friis-Baastad, Canada

காலை மூடுபனி
தேவாலயப் படிகளில்
பன்னிரெண்டு கறுப்பு ஷூக்கள்
-    ஜோ மக்கியோன், ஓஹியோ
Morning fog
Twelve black shoes
On the church steps
-    Joe McKeon, Ohio
கிறித்துமஸ் காலை
ஆடும்குதிரை பொம்மையின்
நீலக்கண்
-    ஆன் மக்யார், மசசூஸட்ஸ்
Christmas morning
The blue eye
Of the rocking horse
-    Ann Magyar
-    Massachusetts
முதல் கனவு
சிறுபறவை அழைக்கிறது
என் ரகசியப் பெயரை
-    பி.ஜி.எம், கலிபோர்னியா
First dream
A small bird calls
My secret name
-    Pjm, California