கிருஷ்ண குமார் கவிதைகள்



பின்னால்
புயலின் சுழிப்பு வானத்தோடு ஒட்டியபடி
என் வீட்டைப் பார்த்து வருகிறது
தாமதிக்காமல்
அந்த பத்து புத்தகங்களை
எடுத்துவிட ஓடினேன்
மூச்சழுந்த ஓடி புத்தகங்களைத்
தேடும்போது
முதலில் என் வீடு வானத்தில்
பறக்க ஆரம்பித்தது
பின்
வீட்டிலிருக்கும் பீரோ கிரைண்டர் சாமான்கள்
அதோடு
ஒரு சின்ன கேமரா
ஏனோ புத்தகங்கள் மட்டும் பறந்திடவில்லை
மிதக்கும் அவற்றில்
அந்த முக்கியமான புத்தகங்களைத் தேடுகிறேன்
எப்போது நானும் பறப்பது ?

--


நித்யா

உன் பிரசவங்கள் என்
சைக்கிள் மிதிக்கு
இணையாகுக.

உன் லயக்குரல் என்
அந்தரங்கக் கொலைகளோடு
ஒத்திசைக.

உன் கரும்புள்ளி என்
தோல்விச் சுவரோடு மோதி
உடைக.

உன் துடிதுடிப்பு நான்
அருந்தும் கண்ணாடி கிளாஸ் தேநீர்

உன் சாகசங்கள் எனக்கு
ஒரு நிமிட புகை பிடிப்பு

உன்
சந்தை சதையில் அலையும்
துருத்திய எலும்பினம்
யார் தெரியுமா?

உன் கைகளில் நெளியும்
வண்ணப் பூக்குவியலில்
ஓடும் ரத்தம்
யாருடையது?

உன்னுடைய
பூரிப்பு
இதழ் தரித்த நிரந்தர நகை
அசைந்து அசைந்து நடக்கும்
நடை யாவும்
என் ஏக்கங்கள்
அது
எப்போதோ நான்
எச்சில் மணலில் பார்த்த
எம்.ஜி.ஆர் படம்

நித்யா /

!..........
ஆமென்

இப்போது சொல்

கழுதை மேல் பவனி செல்லும்
ராஜா
யாரைக் காப்பாற்றுவார்...

---


அப்படியான
கொடுத்து வைத்திராத லாட்டரித் தாள்கள் காற்றில் எறியப்படும் ராக்கெட்டுகளாய் ஆகிவந்த காலம் அதுவீணாகும் துண்டு லாட்டரிகள் பொறுக்கி எடுத்து தெருவைக் கடப்பேன் நிதானமாக நின்று எதிரில் பார்த்தபடி கைகளிலிருந்து குறி வைப்பேன்வாகனம் கடக்காத நேரத்தில்
விர் விர்ரென்று
செலுத்திய கூரான காகித ராக்கெட்டுகள் வெயிலுக்காக கடை மேல் போர்த்தப்பட்ட கோணிப்பையின் துவாரங்களைத் தாக்கும்மிட்டாய்கள் நட்சத்திரங்கள் போல
மினுமினுக்க வண்ண பலூன்கள் மிளிர குறுகலான இடத்தில் அமர்ந்துகொண்டு கடையின் கீழ் ஒளித்து அடுக்கி வைத்திருக்கும் பீடிக்கட்டுகளும் சிகரெட் பெட்டிகளும் தெருமார்களிடம் ரகசியமாக ஒப்படைப்பான் அவன்என்னுடைய ராக்கெட்டுகள் தலைக்கு மேல் சென்றாலும் ஒருபோதும் அவை அவனை நெருங்குவதோ காயப்படுத்துவதோ இல்லைஇருந்தாலும் அவனுக்குள் பயம்அவன் என்னை விரட்டுவான் சத்தம் போட்டு ஏசுவான்
என்றாலும் அவன் மீதான என் ராக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன
எதுவரை என்றால்
ஒருநாள் கொள்ளிட நீர் மண் இழுத்துக்கொண்டு அவனைக் கரைசேர்த்த பொழுது
கொலையுணர்வு கலந்த
என் ராக்கெட் தாக்குதல்கள்
நினைவில் தட்டிய வரை
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif